FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 July 2019

CTET - மத்திய, ஆசிரியர் தகுதி தேர்வு:ஹால் டிக்கெட் பெற அறிவுரை

மத்திய, ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்டை' பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி, தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களாவதற்கு, மாநில அரசின் சார்பில், தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசின் பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர்களாகபணியாற்ற, மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு,வரும், 7ம் தேதி, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள்பங்கேற்க உள்ளனர். 

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், ஒரு வாரம் முன் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பலர் இன்னும் பதிவிறக்கம் செய்யாமல் உள்ளனர்.கடைசி நேரத்தில் பதிவிறக்கம் செய்யும் போது, ஆன்லைனில் தொழில்நுட்பபிரச்னை ஏற்படும் என்பதால், முன் கூட்டியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யுமாறு, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment