FLASH / SPECIAL NEWS
SCROLL
20 September 2018
10 September 2018
INCOME TAX-முழு விவரம்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஏற்கப்பட்டு ஆசிரியர்களின் ஊதியங்களில் பிடித்தம் செய்யப்படும் வருமான வரி தொகையினை சார்ந்த ஆசிரியர்களின் பான் கணக்கில் வரவு வைக்குமாறும், உரிய காலத்தில் வருமான வரி சார்ந்த படிவம்-16-னை சார்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
தமிழ்நாடுபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை-6.
பொருள்:
பள்ளிக் கல்வி - ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில்
பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகை - அறிவுரை வழங்குதல் சார்ந்து
பார்வை:
சென்னை -2, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சங்கத்தினரின் கடிதம் நாள் 7.09.2018
# பள்ளிக் கல்வித் துறை தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகை அவரவர் பான் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளதாகவும், வருமானவரி பிடித்தத்திற்குரிய படிவம் 16 உரிய காலத்தில் வழங்கப்படாததால் வருமானவரித்துறையினரால் ஆசிரியர்களுக்கு
பெரும் இன்னல்கள் ஏற்படுகிறது என பார்வையில் காண் கடிதத்தில்,
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையினை தவிர்த்து இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி
வருமானவரி பிடித்தம் செய்யப்படும் ஆசிரியர்களின் பான் கணக்கில் வரவு வைக்குமாறும்,உரிய காலத்தில் படிவம்-16 வழங்குமாறும பார்வையில் காண் கடிதத்தில்
கோரப்பட்டுள்ளது.
# இக்கோரிக்கையினை பரிசீலனை செய்யப்பட்டு, இனி வருங்காலங்களில்
ஆசிரியர்களின் ஊதியங்களில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை சார்ந்த
ஆசிரியர்களின் பான் கணக்கில் வரவு வைக்குமாறும், உரிய காலத்தில் வருமான வரி
சார்ந்த படிவம்-16-னை சார்ந்த ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் எனவும், வருமானவரி
பிடித்தம் சார்பான ஆசிரியர்களுக்கு எவ்வித இடர்பாடுகள் நேரா வண்ணம்
செயல்படுமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விசி.இராமேஸ்வரமுருகன்
பள்ளிக்கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்