FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label ARTICLES. Show all posts
Showing posts with label ARTICLES. Show all posts

11 January 2016

இன்றைய கல்வி பார்வை: இலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்!

நம்மை ஒரு பணிக்கு தகுதியான நபராக உருவாக்குதிலேயே நமது கல்வித்திட்டம் கவனம் செலுத்துகிறது. உயர்கல்வி மற்றும் அறிவைத் தேடுதல் என்பது தமக்கென, மேன்மையான நோக்கத்தைக் கொண்டிருந்தாலும், கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, நடைமுறையில், பணி வாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

உங்களது கல்லூரி வளாகத்தை விட்டு, நீங்கள் செல்லும்போது, வாழ்க்கையைப் பற்றி ஒரு குறுகிய அணுகுமுறையுடனேயே இருக்கிறீர்கள். வளர்ச்சி, மேம்பாடு, உயர்வு, திறமை, அறிவு, அணுகுமுறை, தனித்தன்மை, வெற்றி, இலக்கு, கடமை, செயல்திறன், குணாதிசயம் மற்றும் செயல்பாடு போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களையும், பணி என்ற ஒற்றை அம்சத்துடன் மட்டுமே நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

நமக்கு சம்பாதிக்க வேண்டிய தேவை இல்லையெனில், நாம் ஏன் கல்விப் பட்டங்களையும், திறன்களையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்? அதேபோன்று, வாழ்க்கையில், மகிழ்ச்சியாகவும், சவுகரியமாகவும் இருக்க விரும்பவில்லை என்றால், எதற்காக பணிபுரிய வேண்டும்? நமது பணியே, நமது வாழ்க்கையின்+ மிகப்பெரிய இறுதி திருப்தி எனும்போது, பிறகு, அந்த நிலைக்காக உங்களை தயார்செய்து கொள்வதைப் பற்றி நினைக்கக்கூடாதா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

நீங்கள் தனிமனிதராக வாழ்க்கையை நடத்துவீர்கள். பின்னர் உங்களுக்கென ஒரு குடும்பம் உருவாகும். உங்களுக்கான உறவுகள் விரிவடையும். வாழ்க்கையில், கடமை, சவால், அனுபவம், உணர்ச்சி/ நிலைகள் மற்றும் பொறுப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

ஒரு குடிமகனாக நீங்கள், உங்களின் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வாக்களிக்கிறீர்கள், வரி செலுத்துகிறீர்கள் மற்றும் சட்டத்தை மதிக்கிறீர்கள். அதேபோல் ஒரு குடும்ப உறுப்பினராக, உங்கள் குடும்பம், நிதி நிலைமை, முதலீடுகள் ஆகியவற்றைப் பற்றி நீங்கள் எப்போதும் சிந்திப்பதுடன், உங்களின் விடுமுறை நாட்களை கொண்டாடுவதைப் பற்றியும் திட்டமிடுகிறீர்கள். ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தையின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பற்றிய அனைத்து விஷயங்களையும் சிந்திக்கிறீர்கள் மற்றும் திட்டமிடுகிறீர்கள்.

மேற்கூறிய அம்சங்கள், ஒரு மனிதனாக, உங்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இதன் வழியாகவே, நீங்கள், உங்களைச் சேர்ந்த மற்றவர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படுத்துவதோடு, நாட்டிற்கும், மனித குலத்திற்கும் உங்களின் பங்கை ஆற்றுகிறீர்கள். உங்களின் பணியைவிட, மேற்கூறிய அம்சங்கள், அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
+
சமூக வளர்ச்சி

உங்கள் வாழ்க்கையின் இத்தகைய செயல்பாட்டு வளர்ச்சி சாத்தியக்கூற்றை அறிந்துகொள்வதை நோக்கிய உங்களின் முதல் சிறிய முயற்சியானது, உங்களின் தனிப்பட்ட மற்றும் சமூக இலக்குகளை வகுத்துக்கொள்வதற்கானது. உங்கள் இலக்குகளின் அர்த்தம் என்ன? என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

நீங்கள் சுயபரிசோதனையில் ஈடுபட தொடங்க வேண்டும். அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை திட்டமிட வேண்டும். இந்த திட்டமிடுதலில், ஒரு-+ தனிநபர், சமூக உறுப்பினர், நாட்டின் குடிமகன், பெற்றோரின் பிள்ளை, ஒரு குழந்தையின் பெற்றோர், ஒரு சகோதரன் அல்லது சகோதரி மற்றும் அடுத்த தலைமுறைக்கான ஒரு வழிகாட்டி என்ற வகையில், உங்களுக்குள் உள்ள பலவித சமூகப் பரிமாணங்கள் உங்களிடம் தாக்கம் செலுத்தும்.

நீங்கள் யாராக அறியப்பட விரும்புகிறீர்கள்? மற்றும் எந்த விஷயத்திற்காக புகழடைய விரும்புகிறீர்கள்? உங்களுடைய- குழந்தைக்கு எந்தவகையில் ஒரு நல்ல பெற்றோராக இருக்க விரும்புகிறீர்கள்? உங்கள் நாட்டிற்கு எப்படிப்பட்ட குடிமகனாக இருக்க விரும்புகிறீர்கள்? மற்றும் எது உங்களுக்கு நீடித்த திருப்தியைத் தரும்? போன்ற பலவாறான கேள்விகள் அலைமோதும்.

உங்களின் இலக்குகளைப் பற்றி, வாழ்வின் பல்வேறான அம்சங்களை யோசித்து, அதனடிப்படையில் எழுதி வைக்கவும். அத்தகைய இலக்குகளை அடைவதில் இருக்கும் உங்களின் பலம், பலவீனம், ஆற்றல், திறமை, சாத்தியக்கூறுகள், நெருக்கடிகள், ஆதரவு,7 வயது, குணாதிசயம் ஆகியவற்றை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். இலக்கு நிர்ணயித்தல் என்பது, ஒரு முழு செயல்பாட்டிற்கு தயாராதலின் இறுதி நிகழ்வு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களின் இலக்குகள் பிரமாண்டமானதாகவும், பிரமாதமானதாவும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, தெளிவானதாகவும், சாத்தியப்படக்கூடியதாகவும், நன்கு திட்டமிடப்பட்டதாகவும், சூழ்நிலைக்கேற்ப பொருந்தக்கூடியதாகவும் இருந்தாலே போதும். உங்களின் மிகச்சிறிய இலக்கு கூட, தேவைப்படும்போது எளிய அல்லது பெரிய முடிவுகளை நீங்கள் எடுக்கையில் மிகவும் உதவியாக இருக்கும்.

உதாரணமாக, உங்களின் தனிப்பட்ட இலக்குகளில் ஒன்று, உங்களுக்கான நோயற்ற, ஆரோக்கிய வாழ்வைத் தருவதாக இருக்கலாம். அத்தகைய இலக்கானது, நீங்கள் துரித உணவகம் செல்லும்போதோ, பீசா அல்லது பர்கர் ஆகியவற்றை சாப்பிட நினைக்கும்போதோ, உங்களுக்கு எச்சரிக்கை ஊட்டி, உங்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் உதவி புரியும்.

தற்போதைய உலகம், நிச்சயமின்மை, சிக்கல்கள், நெருக்கடிகள், ஆபத்துக்கள் மற்றும் மோசடிகள் நிறைந்தது. எனவே, நமது இலக்கானது, சரியாக அடையப்படுமா? என்பதை நம்மால் உறுதிசெய்ய இயலாத நிலையே உள்ளது. சுருக்கமாக சொல்வதானால், நமது வாழ்க்கை, நம் கையில் இல்லை என்று சொல்லும் நிலையே உள்ளது. நாம்+ எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.

எனவே, உங்களின் இலக்குகளை நிர்ணயிக்கையில், சற்றே திறந்த மனதுடனும், ஒன்றுக்கும் மேற்பட்ட சாத்தியக்கூறுகளையும் மனதில்கொண்டே செயல்படவும். நீங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி செல்கையில், ஒரு எதிர்பாராத நிகழ்வு அதை அடையவிடாமல் உங்களை வழிமாற செய்துவிட்டாலும், மனம் தளர்ந்துவிடாமல், வேறொரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுமளவு, மனவலிமையையும், நெகிழ்வையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கைக்கான இலக்குகளை நிர்ணயிப்பதில், நீங்கள் ஈடுபடும்போது, உங்களுக்கே, உங்களைப் பற்றிய பல வித்தியாசமான புரிதல்கள் ஏற்படும். உங்களால், மற்றவர்களுக்கான அல்லது இந்த சமூகத்திற்கான நன்மைகளைப் பற்றி உணர்வீர்கள். "உங்களின் நலன் சமூகத்தின் நலனில் சார்ந்துள்ளது. சமூகத்தின் நலன், உங்கள் நலனில் சார்ந்துள்ளது". இதை மனதில் வைத்து, செயல்பட்டாலே போதும். சிறப்பான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

10 January 2016

இன்றைய கல்வி பார்வை: மாணவர்களுக்கு சில ஆலோசனைகள்

* தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் படிக்காமல், இடையே சிறிது ஓய்வு,மனதை ஒருமுகப்படுத்தும் செயல்களில் ஈடுபடவும்.

* பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்கவும். இதற்கு நேரத்தை பயன்படுத்தும் போது, அது சிறந்த மதிப்பெண்களை

பெற்றுத் தருவதோடு நீண்ட நாள் நினைவில் நிற்கும்.

* சத்தான பழங்கள், காய்கள், தயிர், பால், தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும். ஜீரணம் ஆவதற்கு கடினமான உணவுப் பொருட்களை தவிர்க்கவும்.

* களைப்பு தீர மருந்து உட்கொள்வது, நீண்ட நேரம் விழித்திருக்க காபி, டீ அருந்துவது ஆகியவற்றை தவிர்க்கவும்.

8 January 2016

இன்றைய கல்வி பார்வை: கடைசிநேர படிப்பு - அதிக மதிப்பெண்களைத் தருமா?

நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உண்டு. நெருக்கடியில் இருக்கும்போதுதான், ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதே அது. நெருக்கடி என்பது நமது சிறந்த நண்பர் என்று நினைக்கிறோம். மர்பியின் சட்டம் என்ற பெயரில் ஒரு நகைச்சுவை சொற்றொடர் ஒன்று உண்டு. "தவறாக போக முடிந்த ஒன்று, தவறாக போகும்" என்பதுதான் அது.

இது தேர்வு நேரம். வாழ்க்கையில் அனைத்தையும் மறந்து, தேர்வை நோக்கி மட்டுமே, மாணவர்களின் கவனமெல்லாம் குவிந்திருக்கும் நேரமிது. படிப்பதற்கென்று தற்போது நமக்கிருக்கும் நேரம், நமது படிக்கும் வேகம் மற்றும் நாம் எந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை வைத்து, கால அட்டவணையை தயாரிக்கிறோம். ஆனால், பொதுவாக, இத்தகைய திட்டமிடுதலில், பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் ஒரு சூழலில் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். நமக்கு வெளியே இருக்கும் விஷயங்களால் நாம் கவரப்படுகிறோம் அல்லது பாதிக்கப்படுகிறோம்.

இதுபோன்ற விஷயங்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. கடைசி நேரத்தில், நமக்கு திடீர் காய்ச்சல் உண்டாகலாம். ஏதேனும் சிக்கலில் இருக்கும் நண்பர், நமது உதவியை எதிர்பார்க்கலாம் அல்லது முன்னறிவிப்பு ஏதுமின்றி, யாரேனுமொரு உறவினர், நம் வீட்டிற்கு வெளியூரிலிருந்து வந்துவிடலாம்.

எனவே, கடைசிநேர தொந்தரவுகள் என்பவை, பல நேரங்களில் தவிர்க்க முடியாதவை. எனவே, அவற்றை சமாளிக்கும் வகையில் உங்களை, நீங்கள் தயார்படுத்திக் கொள்வதே ஒரே வழி. உங்களது முன்னுரிமை மற்றும் இலக்குகளை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளவும். மற்றவர்கள், உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். அதேநேரத்தில், இதுபோன்ற எதிர்பாராத சிக்கல்களுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது. நீங்கள் தயாரிக்கும் காலஅட்டவணை கடுமையானதாக இருக்க வேண்டாம். மாறாக, நெகிழ்வுத்தன்மையுள்ள, ஏதேனும் இடையில் தொந்தரவு நேர்ந்தால், சமாளித்து நிறைவுசெய்யக்கூடிய வகையிலான ஒரு கால அட்டவணையை தயார் செய்யவும்.

பொதுத்தேர்வுகள் என்பவை, ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு மிக முக்கிய தருணம். அதன்பொருட்டு, ஒருவருக்கு, நீண்டகால திட்டமிடலும், அர்ப்பணிப்புள்ள உழைப்பும் தேவை. பொதுவாக, நகர்ப்புறங்களில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. "கடைசிநேர முயற்சி, நல்ல பலனைத்தரும்" என்பதுதான் அது. ஆனால் உண்மை என்னவெனில், ஒரு விஷயத்தை படித்து முடித்தப் பின்பாக, அதன் அதிகளவு மறதி என்பது, முதல் 24 மணிநேரத்திற்குள்தான் நடக்கிறது.

ஒரு புதிய பாடத் தலைப்பை, கடைசி நேரத்தில் படிப்பதென்பது சரியான செயல்பாடல்ல. அந்த விஷயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் படித்தால்தான், அது உங்களின் நீண்டகால ஞாபகத்திறனில் பதியும். கடைசிநேர படித்தலின் ஒரு பெரிய தீமை என்னவென்றால், அது உண்டாக்கும் கவலை. நெருக்கடி என்பது, ஒருவரின் செயல்பாட்டை இன்னும் சிறப்பாக்க உதவும் என்றாலும், அதிகப்படியான நெருக்கடி பல விஷயங்களை தடுமாற செய்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒத்திபோடுதல் என்பது, கடைசிநேரத்தில் கலவர சூழலையே உருவாக்கும்.

எதிர்பாராத இடைஞ்சல்கள் என்பவை நமது வாழ்வில் தவிர்க்க முடியாதவைதான் என்றாலும், முதலில் இருந்தே திட்டமிட்டு படித்து வந்தவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. ஏனெனில், முதலிலேயே ஒரு விஷயத்தை சில தடவைகள் படித்தவருக்கு, கடைசி நேரத்தில், அதை ஒருமுறை திரும்பி பார்க்கும்போது, அதை எளிதாக கிரகிக்க முடியும். எனவே, கடைசிநேர படித்தலை நம்பி, தடுமாறி விழாமல், நேரம் இருக்கும்போதே, அதை வீணாக்காமல் சிறப்பாகப் படித்துவிட வேண்டும். அப்போதுதான், கவலையும், பதட்டமும் இல்லாமல், நம்மால் சிறப்பாக பொதுத்தேர்வுகளை வெற்றிகொள்ள முடியும்

7 January 2016

இன்றைய கல்வி பார்வை: கல்வி என்பது வாழ்க்கை முழுமைக்குமான செயல்பாடு: கலாம்

கல்வி என்பது வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். கற்பதற்கு கற்றுக்கொள்ளல், கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளல் மற்றும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ளல் போன்றவையே அந்த அம்சங்கள் என்று திங்க்எடு கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் பேசினார்.

கல்வி என்பது வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். கற்பதற்கு கற்றுக்கொள்ளல், கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளல் மற்றும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ளல் போன்றவையே அந்த அம்சங்கள். தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடந்த சில சுவையான சம்பவங்களை கோடிட்டு காட்டிய கலாம், தனது முன்னேற்றத்தில், தன் ஆசிரியர்களின் பங்கினையும் நினைவு கூர்ந்தார்.

இந்திய குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்க, படைப்புத்திறன் ரீதியான பாடத்திட்டம், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார். சிறந்த ஆசிரியர்களின் பரிணாமம் மற்றும் நல்ல கல்விமுறை ஆகியவை இப்போதைய அவசிய தேவை என்று குறிப்பிட்ட அவர், ஆசிரியர்களை நியமிக்கும் வழிமுறைகள் மாற வேண்டும் என்றார். ஆரம்பக் கல்வியில் செய்யப்படும் சிறந்த மாற்றமே, அனைத்து நிலைகளிலான கல்வியிலும் சிறந்த மாறுதல்களை ஏற்படுத்தும் என்ற அவர், சமூகத்தில், தான் காண விரும்பும் சில மாற்றங்களைப் பரிந்துரைத்தார்.

ஆசிரியர்களுக்கு, பல்கலை சூழலில் பயிற்சியளிப்பது, சமூகம் தனது ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுப்பது, வாழ்நாள் முழுவதும், கற்றுக்கொள்ளும் தாகத்தை ஆசிரியர்கள் பெற்றிருப்பது உள்ளிட்ட, இந்திய கல்வி அமைப்பின் மீதான தனது பார்வையை வெளிப்படுத்தினார். ஆராய்ச்சி மற்றும் தேடுதல், படைப்புத்திறன் மற்றும் புத்தாக்கம், உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறன், தன் முனைப்பு மற்றும் நேர்மையான தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

மேற்கூறிய திறன்களை மாணவர்கள் பெற, பள்ளிகளும், பல்கலைகளும், இரண்டுவிதமான குழுக்களை உருவாக்க வேண்டும் என்றார். ஒரு குழு, சிறப்புத் திறன்கள் தொடர்பான, சிறப்பு அறிவுடைய, திறன்வாய்ந்த இளைஞர்களைக் கொண்ட உலகளாவிய குழு. மற்றது, உயர்கல்வியைப் பெற்ற இளைஞர்களைக் கொண்ட குழு என்பதே அவரின் விளக்கம்.

உலகளாவிய அங்கீகாரம் பெற, இந்தியக் கல்வி கொள்கையில் ஒரு புரட்சி ஏற்பட, அவர் அழைப்பு விடுத்தார். கார்பரேட் நிறுவனங்கள், தங்களின் சமூகம் சார்ந்த பொறுப்புணர்வு பணியில் தாராளத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென ஊக்கப்படுத்தினார்.

முழு கல்வியறிவு என்ற சாதனையை அடைய, கல்வி நிறுவனங்கள் - அரசு - அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே தேவைப்படும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தினார். இந்த ஒருங்கிணைப்பானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிலுள்ள சிறந்த வேலைவாய்ப்பிற்கான போட்டி நிறைந்த மனிதவளம் பற்றி தரவுதளத்தை(database) உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

6 January 2016

இன்றைய கல்வி பார்வை: தேவையா தேர்வு பயம்?

பொதுத் தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து முன்னரே கவலைப்பட துவங்கிவிடுவது, தேர்வு நேரத்தில் தேவையற்ற பயத்தை உண்டாக்குகிறது. சிறப்பாக தேர்வை எப்படி எழுதுவது என்பதை பற்றி மட்டுமே மாணவர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்மறையான எந்த சிந்தனைக்கும் மனதில் இடம் அளிக்கக்கூடாது என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.

கடைசி நேரத்தில் அடித்துப்பிடித்து படித்துக் கொள்ளலாம், என்ற சிந்தனையை அறவே தவிர்ப்பது நல்லது. சக மாணவர்களுடன் ஒப்பிடுவதையும் தவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவரவருக்கு தகுந்தாற்போல், திட்டமிட்டு படிக்க வேண்டும் என்கின்றனர்.

பாடங்களை புரிந்து படிப்பது, தேர்வு நேரத்தில் படித்தவை மறக்காமல் நினைவில் நிற்க உதவும். முக்கியமாக வகுப்பு ஆசிரியர்கள் கூறும் ஆலோசனைகளை, சரியாக பின்பற்றினாலே எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

5 January 2016

இன்றைய கல்வி பார்வை: திருப்புதல் தேர்வு ஒரு தொந்தரவல்ல...

ஜனவரி மாதம் பிறந்து விட்டாலே போதும். அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு படபடப்பு தொடங்கிவிடும். அதிலும் குறிப்பாக, 12ம் வகுப்பு மாணவர்கள், மார்ச் மாதத்திலேயே தேர்வை எதிர்கொள்பவர்களாக இருப்பதால், புத்தாண்டிலிருந்து பதட்டத்துடனேயே காணப்படுவார்கள்.

பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கு முன்னதாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் பல மாணவர்கள், இத்தேர்வுகளை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பலர் அதை ஏதாவது ஒரு காரணம் கூறி, எழுதுவதையும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால், அத்தேர்வின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டால், நாம் அதிக நன்மைகளை அடையலாம்.

பொதுவாக, முழு திருப்புதல் தேர்வு என்பது, பொதுத்தேர்வுக்கான ஒரு முன்னோட்டம்தான். நாம் எந்தளவிற்கு பொதுத்தேர்வுக்கு தயாராகி விட்டோம் என்பதை மதிப்பிடவே, அது நடத்தப்படுகிறது. இந்த திருப்புதல் தேர்வில் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை வைத்தும், நாம் பெறும் மதிப்பெண்களை வைத்தும், நமது தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம்.

அதன்மூலம், எந்தெந்தப் பகுதிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அத்தகைய பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படித்து, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை அள்ளலாம். திருப்புதல் தேர்வை ஒரு தொல்லையாகவே பல மாணவர்கள் நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு சோதனை ஓட்டம்தான். அதன்மூலமாக, நிஜப் போட்டிக்கு நாம் நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்கிறோம்.

மேலும், இந்த ஆயத்த நிலையானது, பொதுத் தேர்வுக்கு மட்டுமின்றி, அதன்பிறகு வரும் நுழைவுத் தேர்வுகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்த திருப்புதல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகையில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள், எவ்வாறு சிறப்பாக எழுதுவது என்ற பயிற்சி கிடைக்கிறது.

இந்த திருப்புதல் தேர்வை எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுவதன் மூலமாக, பொதுத்தேர்வைப் பற்றிய பயம் பெருமளவு குறைகிறது. எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்துபயிற்சி செய்தால், அதன் மீதான செயல்பாட்டு பயம் இல்லாது போய்விடும் என்பது ஒரு பொது உண்மை. அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்த தேர்வு பயிற்சியும்.

எனவே, மாணவர்கள், இந்த திருப்புதல் தேர்வை ஒரு சுமையாகவோ அல்லது விளையாட்டாகவோ கருதாமல், அதை, பொதுத்தேர்வுக்கான ஒரு முன்னோட்டமாக எடுத்துக்கொண்டு, சிறப்பாக படித்து, பொதுத்தேர்வாக நினைத்து எழுதி அதிக மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது, பொதுத்தேர்வில் நீங்கள் சாதிப்பது சுலபமாகவே இருக்கும்.


4 January 2016

இன்றைய கல்வி பார்வை: தனித்திறன் வளர்ப்பு

கல்வி என்பது கல்விக்கூடத்தில் மட்டுமல்ல, கல்வி நிலையத்தையும் கடந்து மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய தேவைகள் அதிகமுள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் நம்மை நிதான படுத்திக்கொள்ளவும், செயல் திறனை வளர்த்துக் கொள்ளவும் அவசியமாக இருப்பது தனித்திறன்கள்தான்.

இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், படித்து நல்ல வேலையை எளிதாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனையே குறிக்கோளாக கொண்டு அதன் பாதையிலே நடை போட முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த மாணவன்/ மாணவி கல்வி பயிலும் காலத்தைக் கடந்து வேலைக்கு சென்ற பின், அந்த துறையில் தொடர்ந்து போட்டிகளை எதிர்கொண்டு, தங்களை நிலை நிறுத்திக்கொள்ள தேவை, தனித்திறனே ஆகும்.

தனித்திறன் என்பது என்ன?

நன்றாக பாடங்களை புரிந்து மனப்பாடம் செய்து தேர்வில் வெற்றி பெறுவதுதான் தனித்திறனா? இல்லை. தனித்திறன் என்பது உலக அறிவை, உடல் நலனை சார்ந்த செயல்களாகும். இவை எப்படி தனித்திறனை வளர்க்கும்?

"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்" என்ற வாக்கியம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஒரு மாணவன் என்னதான் நன்றாக படித்தாலும், அவன் உடல் நிலை நலமாக இருந்தால்தான் படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியும். சிறு வயதிலேயே நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் உடல் சோர்வு போன்ற நோய்களால் அவதிப்படுகிறவர்களை நாம் காண்கிறோம். சம்பாதிக்கும் பணத்தை இப்படி நோய்க்கு செலவழித்தால் அந்த வருமானத்தால் என்ன பயன்?

படிக்கும் காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை படிப்பது மட்டும் தான். ஆனால் வேலைக்கு சென்ற பின் பெரும் நிறுவனத்தின் பெயரை நிலை நாட்ட வேண்டும், குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கடமைகள் வரும் பொழுது அதனை வெறும் படிப்பறிவால் எதிர்கொள்ள முடியுமா?

ஒரு வங்கிக்கு சென்றால் எத்தனை பேருக்கு அதன் செயல்பாடுகள் தெரிகிறது? எத்தனை மாணவர்களுக்கு வேலைக்கான Application -ஐ நிரப்ப தெரிகிறது? இவையெல்லாம் படிப்பறிவினால் மட்டும் தெரிந்து கொள்ள முடியுமா?

வேலைப்பளுவினால் மனம் அழுத்தம் அடையும்பொழுதும், ஒரே மாதிரியான வேலையிலும் நம்மை புதுப்பித்துக் கொள்ளவும் நாம் கற்றுக் கொண்டோமா?

இதனை எல்லாம் அந்த நெருக்கடியான சூழ்நிலையில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அமையுமா? ஒரு சிலருக்கு கிடைக்கலாம். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் நிலை மேலும் சிக்கலாகத்தானே அமையும். இதனை எல்லாம் சந்தித்து வரும் பெற்றோர் தான் தங்கள் பிள்ளைகளுக்கு மாணவப் பருவத்திலேயே போதிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

நல்ல உடல் நலத்துக்கு விளையாட்டும், மனம் புத்துணர்வு பெற இசையும் கலையும், சவால்களை எதிர்கொள்ள நடைமுறை நிகழ்வுகள் போன்ற தனித்திறன்களை மாணவப் பருவம் முதற்கொண்டே கற்றுக்கொண்டால் தானே எதிர்கால வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.

3 January 2016

இன்றைய கல்வி பார்வை: தேர்வை வெற்றிகொள்ள...

தேர்வு நெருங்க நெருங்க ஒவ்வொரு மாணவர் மனதிலும், தான் படித்தது நினைவில் இல்லையோ என்ற பயம் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும். தாய் தந்தையரின் "கவுன்சிலிங்குல சீட் வாங்கினாதான் செலவு பண்ண நம்ம பொருளாதாரம் இடம் கொடுக்கும்" என்ற நெருக்குதலும், சுற்றத்தாரின் "எத்தனை மார்க் வாங்குவீங்க"? போன்ற கேள்விகளும் மேலும் பதற்றத்தையும், கவலையையும் உண்டாக்கும்.

இது மாதிரியான குழப்பங்களை எல்லாம் தவிர்த்து வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு படிப்பில் முழு கவனமும் செலுத்தினால் தான் சிறந்த மதிப்பெண்களை பெற முடியும்.

நாட்கள் குறைவாக இருக்கிறதே என கவலைப்படாமல், இருக்கும் நாட்களை சரிவர பயன்படுத்தினாலே போதும் என்ற மன நிலையை முதலில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பரீட்சை முடியும் வரை செல்போன், டி.வி. மற்றும் சமூக வலைத்தளங்களை அறவே ஒதுக்கி வைக்கவேண்டும். கடினமாக இருந்தாலும், சில நாட்களுக்கு இவற்றை தவிர்த்தால் தான் எதிர்காலம் நலமாக அமையும்.

படிக்க தேர்ந்தெடுக்கும் இடம் அமைதியான இடமாக இருக்க வேண்டும். வீட்டில் அண்ணன், தங்கை டி.வி. பார்க்க வேண்டும், பாட்டு கேட்க வேண்டும் என்று சொன்னாலும், உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி வீட்டில் படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

மாலையில் படித்ததை அதிகாலையில் எழுந்து மறுபடியும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். படிக்கும்பொழுது கடினமான பாடம் கொஞ்சம், எளிதானது கொஞ்சம் என கலந்து படிக்க வேண்டும். ஒரே பாடத்தையே தொடர்ந்து படிக்காமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாடங்களை மாற்றி படிக்க வேண்டும். அப்பொழுதுதான் படிக்கும் பொழுது ஈடுபாடு அதிகரிக்கும்.

சற்று அசதியாக உணரும் நேரமெல்லாம், சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மால் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியும் என்று தினம் தினம் எண்ணி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக உழைத்தால்தான் வயலும் பயன்தரும். ஆனாலும் அதற்கு வான் மழை பொய்க்காமல் பெய்ய வேண்டும். அது போல தங்கள் பிள்ளைகள் சாதிக்க வேண்டும் எனில் பெற்றோரும் உடனிருந்து சத்தான உணவையும், தளரும்போதெல்லாம் ஊக்கத்தையும் அளித்தால் வெற்றி எளிதாக கைவசமாகும்.

2 January 2016

இன்றைய கல்வி பார்வை: கல்வியில் நாம் எங்கே?

உலக நாடுகளில், எது சிறந்த கல்வி அமைப்பை கொண்டுள்ளது என்ற கருத்துக்கணிப்பை, இங்கிலாந்தில் உள்ள பியர்சன் கல்வி நிறுவனம் நடத்தியது.

முதல் 20 நாடுகளின் பட்டியலில், பின்லாந்து முதலிடமும், தென் கொரியா இரண்டாமிடமும் பெற்றுள்ளன. இக்கருத்துக் கணிப்பு, 2006 முதல் 2010 வரை, சர்வேதச அளவில் ஒவ்வொரு நாடும், பெற்ற கல்வியின் தரம், அமைப்பு, முறை, பட்டதாரிகளின் சதவீதம் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பியர்சன் நிறுவனத்தின் தலைமை கல்வி அலோசகர், மைக்கேல் பார்பர் கூறும்போது, கல்வி முறையில் சிறந்து விளங்கும் நாடுகளில், ஆசிரியர்கள் உயர்வாக மதிக்கப்படுகின்றனர். அங்கு கலாசாரம், ஒழுக்கம் சிறந்து காணப்படுகிறது என்றார்.

பட்டியலில் இடம் பெற்ற டாப் 20 நாடுகள்

1. பின்லாந்து
2. தென் கொரியா
3. ஹாங்காங்
4. ஜப்பான்
5. சிங்கப்பூர்
6. இங்கிலாந்து
7. நெதர்லாந்து
8. நியூசிலாந்து
9. சுவிட்சர்லாந்து
10. கனடா
11. அயர்லாந்து
12. டென்மார்க்
13. அஸ்திரேலியா
14.போலந்து
15. ஜெர்மனி
16. பெல்ஜியம்
17. அமெரிக்கா
18. ஹங்கேரி
19. ஸ்லோவாக்கியா
20. ரஷ்யா

(இப்பட்டியலில் இந்தியா இடம் பெறவில்லை)

31 December 2015

இன்றைய கல்வி பார்வை: திட்டமிட்ட செயல்பாடு - அதிக மதிப்பெண்கள்

ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ, அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப்படும். எப்படி படிக்கிறோமோ, அதை வைத்தே நமது மதிப்பெண்கள் இறுதி செய்யப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற, எப்படி சிறப்பாக படிக்கலாம் என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

திட்டத்தை மேம்படுத்துங்கள்

படிப்பதைப் பற்றி யோசிக்கும் முன்பாக, அதற்கான சிறப்பான திட்டமிடலை மேற்கொள்வது முக்கியம். சரியான திட்டமிடல் இல்லையெனில், எதிர்பாராத திடீர் நெருக்கடி ஏற்படுகையில் சமாளிப்பது கடினம். உங்களின் நேரம், உங்களின் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும். உங்களின் திட்டத்தில், தேவை மற்றும் சூழலுக்கேற்ப மாறுதல்களையும் மேற்கொள்ளலாம். ஆனால், உங்களின் திட்டத்தை, தவறாமல் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

அதிக கற்பனை வேண்டாம்

தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஆனால், அதேநேரத்தில், தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய கற்பனை நிச்சயம் கெடுதலையே தரும். படித்தல் என்பது, அதிக கவனம் தேவைப்படும் ஒரு விஷயம் என்பதால், இதற்கு மூலதனமாக, அதிக ஆற்றலும் தேவை. எனவே, பல மணிநேரங்கள், ஒரே விஷயத்தை எளிதாக படித்துவிட முடியாது.

உங்களுக்கான சரியான நேரம்

எந்த நேரத்தில் படித்தால் நல்லது என்ற வாதம் நீடித்த ஒன்றாக உள்ளது. இதற்கான பதில் என்னவென்றால், யாருக்கு எந்த நேரம் ஒத்துவருமோ அந்த நேரத்தில் படிக்கலாம் என்பதுதான். சிலருக்கு காலை வேளையில் படிப்பது பிடிக்கும். சிலருக்கோ, இரவு நேரம்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். காலையில் படித்தால்தான் நன்றாக நினைவில் நிற்கும் என்ற கருத்தை பொருட்படுத்த வேண்டியதில்லை. காலை நேரத்தைவிட, இரவு என்பது அமைதியான நேரம்.

உங்களுக்கு பிடித்தமான நேரத்தை, சீரிய கவனம் செலுத்தி சிறப்பாக படித்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில், வேறு எந்த தொந்தரவையும் அனுமதிக்கக்கூடாது.

பொருத்தமான இடம்

சிறப்பாக படிப்பதற்கு, சரியான இடம் என்பதும் முக்கியமான ஒன்று. எனவே, உங்களின் இல்லத்திலோ அல்லது நண்பர் இல்லம் அல்லது வேறு இடங்களிலோ, படிப்பதற்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து கொள்வது உங்களின் பொறுப்பு. எந்த இடம், அமைதியாகவும், தொந்தரவின்றியும், நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளதோ, அது படிப்பதற்கு சிறந்த இடம்.

ஒரே பாடம் வேண்டாம்

நீங்கள், ஒரே பாடப் புத்தகத்தை, ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால், அதில் சலிப்பு ஏற்படலாம். எனவே, ஒரு நாளைக்கு ஒரு பாடப்புத்தகமோ அல்லது சில மணி நேரங்களுக்கு ஒரு பாடப்புத்தகத்தை மாற்றியோ, படிக்கலாம். மேலும், இடைபட்ட நேரங்களில் மாதிரி தேர்வுகளையும் எழுதிப் பார்க்கலாம்.

சரியான நுட்பங்களைப் பயன்படுத்தல்

உங்களின் படித்தல் செயல்பாட்டை சிறப்பாக்கும் வகையில், பல நுட்பங்கள் உள்ளன. எனவே, அவற்றில் உங்களுக்குப் பொருத்தான நுட்பத்தை பின்பற்ற வேண்டும். படிக்கும்போதே, முக்கியமான பாயின்டுகளை, அடிக்கோடிட்டு, அர்த்தம் தெரியாத வார்த்தைகளுக்கு, புத்தகத்தின் ஓரத்திலேயே அர்த்தம் எழுதிவைத்து படிப்பது ஒரு சிறந்த நுட்பம்.

உங்களின் செயல்பாட்டை மதிப்பிடுதல்

நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிட்டப்படி, குறிப்பிட்ட பாடங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடித்து விட்டீர்களா? மாதிரி தேர்வுகளை சிறப்பாக செய்துள்ளீர்களா? கடினமான பகுதிகளை சரியாகப் புரிந்து கொண்டீர்களா போன்ற மதிப்பீடுகளை செய்துகொள்வது அவசியம்.

சுய மதிப்பீடு

நீங்கள் சரியாக படித்து தயாராகி விட்டீர்களா என்பதை சுய மதிப்பீடு செய்து சரிபார்த்துக் கொள்வது அவசியம். மாதிரி தேர்வுகள் இவற்றில் முக்கியமானவை. இல்லையெனில், பிறரை கேள்விகள் கேட்கவிட்டு, அதற்கு பதில் சொல்லி, படித்ததை தெளிவாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம். படிக்கிறேன் என்ற பெயரில், அதிக நேரம் புத்தகமும், கையுமாக அமர்ந்து, பெற்றோரை ஏமாற்ற தயவுசெய்து நினைக்க வேண்டாம். ஏனெனில், உங்களின் தேர்வு மதிப்பெண்கள் நீங்கள், உண்மையிலேயே என்ன செய்தீர்கள் என்பதை தெளிவாக கூறிவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

30 December 2015

இன்றைய கல்வி பார்வை: வசமாக வேண்டுமா வெற்றி!

நாம் பெறுகின்ற வெற்றியில், அறிவுக் கூர்மை முக்கிய பங்கு வகிக்கிறது. யாராவது ஒருவர் எதிலாவது வெற்றி பெற்றால், அவர் அறிவுக்கூர்மை உடையவர் என்று அனைவரும் நினைப்பதுண்டு.

ஒருவருக்கு அறிவுக்கூர்மையில் தடை ஏற்பட்டால், அவருக்கு வெகுமதியாக கிடைப்பது, அவமானங்கள் மட்டுமே. அப்படியென்றால் அறிவாளிகள் தான் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கான விடையை, வேறு வித கண்ணோட்டத்துடன் பார்க்கலாம்.

சராசரி அறிவுக் கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது பயம் மற்றும் சந்தேகத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா அல்லது சராசரி அறிவுக்கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறையான கண்ணோட்டத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா. இந்த கேள்விகளை ஆராய்ந்தாலே போதும். யார் ஒருவர் நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறார்களோ அவருக்கே வெற்றி வசமாகும்.

அதே சமயத்தில் உங்களது பணியில் அறிவுக்கூர்மை முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் உங்களது பணி, ஒரு எல்லைக்கு உட்பட்டது. அதனால் தான், அதிக மக்கள் நேர்மறையான சிந்தனையே, வெற்றிக்கு வழி வகுக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். திறமை, அறிவு, செயல்திறன்கள் உள்ளிட்ட அனைத்தும் இரண்டாம் பட்சம் தான் என்பதை உணர வேண்டும்.

ஆகவே, எந்த செயலிலும் நேர்மறையான சிந்தனையோடு செயல்பட்டு வெற்றியை அடையுங்கள்.


29 December 2015

இன்றைய கல்வி பார்வை: வசமாக வேண்டுமா வெற்றி!

நாம் பெறுகின்ற வெற்றியில், அறிவுக் கூர்மை முக்கிய பங்கு வகிக்கிறது. யாராவது ஒருவர் எதிலாவது வெற்றி பெற்றால், அவர் அறிவுக்கூர்மை உடையவர் என்று அனைவரும் நினைப்பதுண்டு.

ஒருவருக்கு அறிவுக்கூர்மையில் தடை ஏற்பட்டால், அவருக்கு வெகுமதியாக கிடைப்பது, அவமானங்கள் மட்டுமே. அப்படியென்றால் அறிவாளிகள் தான் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கான விடையை, வேறு வித கண்ணோட்டத்துடன் பார்க்கலாம்.

சராசரி அறிவுக் கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது பயம் மற்றும் சந்தேகத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா அல்லது சராசரி அறிவுக்கூர்மை உடையவர், ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறையான கண்ணோட்டத்துடன் இறங்கினால் வெற்றி பெறுவாரா. இந்த கேள்விகளை ஆராய்ந்தாலே போதும். யார் ஒருவர் நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறார்களோ அவருக்கே வெற்றி வசமாகும்.

அதே சமயத்தில் உங்களது பணியில் அறிவுக்கூர்மை முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் உங்களது பணி, ஒரு எல்லைக்கு உட்பட்டது. அதனால் தான், அதிக மக்கள் நேர்மறையான சிந்தனையே, வெற்றிக்கு வழி வகுக்கிறது என்பதை அறிந்து வைத்திருக்கின்றனர். திறமை, அறிவு, செயல்திறன்கள் உள்ளிட்ட அனைத்தும் இரண்டாம் பட்சம் தான் என்பதை உணர வேண்டும்.

ஆகவே, எந்த செயலிலும் நேர்மறையான சிந்தனையோடு செயல்பட்டு வெற்றியை அடையுங்கள்.

28 December 2015

இன்றைய கல்வி பார்வை: வாழ்வில் உயர வழிகள்

என்னதான் படிப்பில் சிறந்து விளங்கினாலும், மற்ற துறைகளில் பலரால் சோபிக்க முடியவில்லை. இதற்கு அதற்கு பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.

எனவே, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய, சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும். நீங்கள் சிகரத்தை தொட முடியும்.

* அதிகாலையில் விழித்தெழ வேண்டும்
* தகுந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும். 
* எதையும் முழு ஈடுபாட்டுடன், முழுத் திறமையை பயன்படுத்தி செய்ய வேண்டும்.
* அனைவருடனும் நன்கு பழகும் தன்மையை வளர்க்க வேண்டும்.
* நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்வதோடு, தீய பழக்கம் அணுகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* எப்போதும் தன்னம்பிக்கை, உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.
* மனிநேயத்துடன் உதவும் பண்பை, வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* உதவி செய்தவர்களை மறக்காமல் இருக்க வேண்டும்.
* நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும்.
* எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

27 December 2015

இன்றைய கல்வி பார்வை: வாழ்வில் வெற்றியடைய விரும்பினால்...

தனக்கான ஒரு எதிர்கால தொழில்துறையைத் தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு மாணவருக்கும் பெரிய சவாலாகவே எப்போதும் திகழ்கிறது. ஏனெனில், பலரால் விரும்பப்படுவது, பலரால் பரிந்துரைக்கப்படுவது, வருமானம் அதிகம் வருவது, பல கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்பிற்கே முக்கியத்துவம் கொடுப்பது போன்ற நெருக்கடியான அம்சங்களைத் தாண்டி, ஒரு மாணவர், தனது விருப்பம் மற்றும் தன்னுடைய பிறவித் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு துறையை தேர்வு செய்வதென்பது சவாலான மற்றும் மனோதிடம் தேவைப்படும் ஒரு செயல்பாடாகும்.

எத்தனை புற அம்சங்கள் இருந்தாலும், தனக்கான எதிர்காலத் துறையைத் தேர்ந்தெடுப்பதில், ஒரு மாணவர், தன் விருப்பம் மற்றும் உள்ளார்ந்த திறனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தப்படி திருப்தியான வாழ்க்கையை வாழ முடியும். இதுதொடர்பான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

விருப்பமே முக்கியம்

ஒருவர் தனிப்பட்ட முறையில் வாழும் சந்தோஷமான மற்றும் திருப்தியான வாழ்க்கையானது, அவரது பணி திருப்தியையே பெரிதும் சார்ந்துள்ளது. தான் செய்யும் பணியை விரும்பி மேற்கொள்ளும் ஒருவர், தனது வாழ்க்கையையும் விரும்புகிறார்.

நீங்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் பணியானது, வருமானம் குறைந்த ஒன்றாகவும் இருக்கலாம். வருமானம் குறைவு என்பதற்காக ஒருவரின் இயல்பார்ந்த விருப்பத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது கடினம். வேண்டாத வேலையும்கூட. வருமானத்தைப் பெருக்குவதற்கு வேறு மாற்று வழிகளைக்கூட உருவாக்கிக் கொள்ளலாம்.

ஏனெனில், பணத்தால் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்துவிட முடியாது. எனவே, பணத்தின் அடிப்படையில் மட்டுமே, வருங்காலத் தொழிலை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், பலவிதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்வதோடு, இடையிலேயே தொழிலை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு, காலங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்படும்.

உள்ளார்ந்த திறன்

ஒருவர் பிறப்பிலேயே, மரபுவழியில் பல உள்ளார்ந்த ஆற்றல்களைப் பெற்றிருப்பார். ஒருவருக்கு வரலாறு, தத்துவம், அரசியல் உள்ளிட்ட விஷயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்வதும் அவருக்கு எளிது. சிலருக்கு இலக்கியம் என்றால் உயிர். சிலருக்கு தொழில்நுட்பம் என்றாலே அலாதி விருப்பம். சிலருக்கோ, மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம். இப்படி, பலவாறாக இருக்க, இந்த சமூகம் பல சமயங்களில் அதைப் புரிந்துகொள்வதில்லை.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் இயல்பாற்றலை அறியாமலேயே, சமூகத்தில், வருமானத்தின் பொருட்டு, பிரபலமாக இருக்கும் சில படிப்புகளில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் (உதாரணம் - மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள்).

விருப்பமில்லாத மற்றும் உள்ளார்ந்த ஆற்றல் இல்லாத துறைகளில் ஈடுபடுபவர்கள், எதையும் சாதிக்க முடியாமல், வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும்.

இலக்கை நிர்ணயித்தல்

லட்சியத்தை அடைய, இலக்கு நிர்ணயம் செய்வதென்பது, ஒரு மிகுந்த முக்கியத்தும் வாய்ந்த செயல்பாடாகும். சரியான இலக்கின் மூலமே, நமது கனவை நனவாக்க முடியும். உலகின் மிகப்பெரிய சாதனையாளர்கள் அனைவரும், சரியான ஒரு இலக்கை நிர்ணயம் செய்து, அதன்படி செயல்பட்டே தங்களின் லட்சியத்தை அடைந்தார்கள். இலக்கு நிர்ணயித்தல் என்பது, விரிவான செயல்திட்டம் வகுத்தலாகும்.

லட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகள், அதற்கான காலஅளவு, இன்னின்ன காலத்தில் இன்னின்ன முயற்சிகள், தேவைப்படும் மாற்றங்கள், சரியான நபர்களின் ஆலோசனைகள், ஏற்படும் தடைகளை களைவதற்கான வழிமுறைகள், சோர்ந்து போகாமல் இருப்பதற்கு தேவையான மனோதிடத்தை தக்கவைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறுதல், லட்சியத்தை அடைவதற்கான முழு காலஅளவு போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் திட்டமிட்டு முடிவெடுத்தலே இலக்கு நிர்ணயித்தலாகும். தெளிவான முறையில் இலக்கு நிர்ணயித்தப் பின்னர், தாமதமின்றி செயல்படத் தொடங்க வேண்டும்.

எதுவும் எளிதல்ல...

நீங்கள் ஒரு லட்சியத்தை நிர்ணயித்து, அதை அடைவதற்கான செயல்பாட்டில் ஈடுபடத் தொடங்குகையில், உங்களுக்கான பயணம் பெரும்பாலும் இலகுவானதாக இருக்காது. பலவிதமான தடைகள், மன உளைச்சல்கள், பலரின் எதிர்மறை கருத்துக்கள், உடலியல் உபாதைகள், திட்டமிட்ட காலத்தைவிட, அதிக காலம் செலவாதல், எதிர்பார்த்த எளிய வாய்ப்புகள் கிடைக்காமல் போதல் போன்ற எத்தனையோ தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்துவிட்டால், நிச்சயம் நினைத்ததை அடைய முடியாது. உங்களின் நண்பர்கள் ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் படிக்க வேண்டியதிருக்கலாம். ஆனால் அந்த ஜாலி நிரந்தரமல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எந்த லட்சியமும் உடனடியாக அடையப்பட்டதல்ல. பல நாள் முயற்சியில், பல ரணங்களுடன் அடையப்பட்டவையே. பல சாதனையாளர்களின் பேட்டிகளைப் படிக்கையில் இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு துறையில் சாதனைப் புரிந்தவர்களும் தாண்டி வந்த தடைக்கற்கள் பல. பள்ளிப் படிப்பை முடிக்கவே சிரமப்பட்டவர்கள் ஐஏஎஸ் ஆனதுண்டு. அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தவர்கள், கோட்டை விட்டதுமுண்டு. தளராத மனவுறுதியுடன், விடாத முயற்சியை மேற்கொள்பவரே, இறுதியில் வெற்றியாளராக ஜொலிப்பார் என்பதே உலக உண்மை. இதை உணர்ந்தவருக்கு கவலையில்லை.


26 December 2015

இன்றைய கல்வி பார்வை: அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

பள்ளிப் பருவம் முதல் கல்லுõரி வரை, மாணவர் களுக்கு எழும் கேள்வி, எப்படி படிப்பது?, எப்படி அதிக மார்க் எடுப்பது என்பதுதான். சில மாணவர்கள் கஷ்டப்பட்டு படிப்பர், அதிக மதிப்பெண்ணும் பெறுவர். சிலர் சுமாராக படிப்பர். ஆனாலும், தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து விடுவர்.

சிலர் என்னதான் கஷ்டப்பட்டு படித்தாலும், அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. இதற்கு காரணம், எப்படி படிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரிவதில்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில், தேர்வுக்கு தயாராகின்றனர். எப்படி படிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.

* வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

* ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.

* படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.

* அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.

* படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.

* நன்றாக சாப்பிட வேண்டும். சத்தான உணவு உண்ணுவது அவசியம். அதே போல, போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.

* கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.

* படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

* தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.

* கடவுள் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

* தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

25 December 2015

இன்றைய கல்வி பார்வை:எளிதாக படிக்க இதோ வழி

தம்பி, படிக்க உட்காரு... என மாணவர்களிடம் தெரிவிப்பது, வேப்ப இலையை அரைத்துக் குடிக்க கொடுப்பதைப் போல அவர்களுக்கு தோன்றும். படிக்கும் முறைகளை, நம்மவர்கள் சரிவர கடைபிடிக்காததே இதற்கு காரணம்.

படிக்க சில எளிய வழிகள்

* அமைதியான சூழலில் படியுங்கள். உங்கள் எண்ணம் சிதறாமல், கவனம் திசை திரும்பாமல் இருக்கும். 
* அட்டவணை போட்டு படிக்க துவங்குகள். அன்றைய தினம் என்னென்ன பாடங்கள்
அட்டவணையில் உள்ளதோ, அதை அன்றே முடித்து விடுங்கள். 
* சிலருக்கு அதிகாலை படிக்க பிடிக்கும்; சிலருக்கு நள்ளிரவு படிக்க பிடிக்கும். உங்களுக்கு எந்த நேரம் சரியாக உள்ளது என்று ஆராய்ந்து படிக்கவும். 
* ஒரே நேரத்தில், இரண்டு வேலைகளை
பார்க்கும் மனப்பான்மையை மாற்றுங்கள்.
ஒரு வேலையை செய்யுங்கள். அதை ஒரு மனதாக செய்யுங்கள்.
* பெரிய வினாவை படித்தவுடனோ;
எழுதியவுடனோ சிறிது இடைவெளி எடுக்கலாம். அது, மூளையை சோர்வடையாமல் காக்கும். 
* தினமும் காலை யோகா செய்யும் பழக்கத்தை கடைபிடிக்கலாம். இது மனதை அமைதியாக
வைத்திருக்க உதவும். 
* படிக்கும் நேரத்தில் வேறு சிந்தனைகளையோ, மனதில் ஓட்டாதீர்.
* பிடிக்காத பாடத்தையும், விருப்பத்துடன் படிக்க பழகுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உள்ள சம்பவங்களுடன், ஒப்பிட்டு பாடங்களை படித்தால் எளிதில் புரியும். 
* பாடத்தை குறிப்பெடுத்து படித்தால்,
ரிவைஸ் செய்வதற்கு உதவியாக இருக்கும். 
* ஒரு பாடத்தை 2 அல்லது 3 முறை திரும்பி பார்த்தால் மட்டுமே, மனதில் நன்கு பதியும். 
* படித்து முடித்த பின், எழுதிப் பார்க்கலாம். அல்லது நண்பர்களுடன் படித்ததை கலந்து ஆலோசிக்கலாம். அவ்வாறு செய்தால், அவர்களிடமிருந்து நாம் படிக்காத சில தகவல்களையும் பெறலாம். சந்தேகங்களையும் தீர்க்கலாம்.

24 December 2015

இன்றைய கல்வி பார்வை: வெற்றிபெற திட்டமிடுங்கள்

மாணவர்கள், திட்டமிட்டு செயல்படும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், வாழ்வில் எளிதில் சாதிக்கலாம். பெரும்பாலானோர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிக்க தவறி விடுகின்றனர்.

கிராமப்புற மாணவர்களுக்கு திட்டமிடாமை பின்னடைவை உண்டாக்கும். இவர்களுக்கு வாய்ப்புகள் குறைவு. கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியும். நகர்ப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகள் அருகிலேயே இருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருப்பர்.

அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், சில விஷயங்களில் நகர்ப்புற மாணவர்கள் முந்தி நிற்கின்றனர். மாணவர்களின் பெற்றோருடன் விழிப்புடன் இருப்பதே இதற்கு காரணம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கடைசி தேதிக்கு சற்று முன்பு, அவசர அவசரமாக விண்ணப்பத்தை அனுப்புகின்றனர்.

அடுத்து ஹால் டிக்கெட் வந்த பின்னர்தான் அது தொடர்பாக படிக்க முயற்சி செய்கின்றனர். இன்றைய போட்டி மிக்க உலகுக்கு இது சரி வராது. மேற்படிப்புக்குரிய நுழைவுத் தேர்வாக இருந்தாலும் சரி, வேலைவாய்ப்புக்குரிய தேர்வுகளாக இருந்தாலும் சரி. வெற்றி என்பது திட்டமிட்டுக் கொள்பவர்களுக்கே சாதகமாக அமைகிறது.

ஒரு குறிப்பிட்ட தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஆண்டு தோறும் அந்த தேர்வு எப்போது நடக்கிறது; அதற்கு முன் குறைந்தபட்சம் எவ்வளவு காலம் தயாராக வேண்டும்; தற்போதுள்ள வேலைகளுக்கு இடையில் எவ்வளவு நேரம் ஒதுக்குவது என பல விஷயங்களை நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சுயமாக படிக்கலாமா, பயிற்சி மையத்துக்கு செல்வது அவசியமா உள்ளிட்ட விஷயங்களை, கருத்தில் கொள்வது நல்லது.

பழைய கேள்வித் தாள்களை பயிற்சிக்கு எடுத்துக் கொள்வது, ஏற்கனவே இந்த தேர்வை எழுதியவர்களிடமும், அத்தேர்வில் வெற்றி பெற்றவர்களிடமும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் அத்தியாவசியமானவை.

விண்ணப்பத்துடன், கைகளுக்கு கிடைக்கும் விளக்க குறிப்புகள் மட்டுமே போதுமான தகவல்களை அளிக்காது. தேர்வு தொடர்பான அத்தனை விபரங்களையும் தேடித்தேடி தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு, தேர்வாகி விடுவோம் என மனதில் கோட்டை கட்டுவது வெற்றிக்கு உதவாது.

23 December 2015

இன்றைய கல்வி பார்வை: படிப்புக்கு எது தடை?

மாணவர்களின் கல்விக்கு, பாதிப்பு ஏற்படுத்துவதில் முன்பெல்லாம் டிவி முக்கிய பங்கு வகித்தது. அவர்களின் தேர்வு முடிவுகளும் பாதிக்கப்பட்டன. சில பெற்றோர், தேர்வு நேரங்களில் வீடுகளில் இருக்கும் கேபிள் தொடர்பையே துண்டித்து விடுவர். அந்தளவு டிவியின் தாக்கம் இருந்தது.

அறிவியல் வளர்ச்சியால், தற்போது மாணவர்களின் படிப்புக்கு தடையாக விளங்குவதில் டிவியை முந்தி விட்டன பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள். இன்று பெரும்பாலான மாணவர்களிடம், கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. இன்டர்நெட் வசதியும் பெருகிவிட்டன. இதன் மூலம் நன்மைகள் அதிகம்தான். இருப்பினும் அதனை யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு பெறாமல் இருக்கிறோம்.

இன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் கூட, பேஸ்புக்கில் அக்கவுன்ட்(பயனர்) வைத்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதிலிருந்து சமூக வலைதளங்களின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை உணர முடியும்.

மாணவர்கள், இளைஞர்கள், வேலை பார்ப்பவர்கள் என வயது வித்தியாசமின்றி, ஒரு நாளில், பெரும்பாலான நேரம், சமூக வலைதளங்களின் முன்பு உள்ளனர். இதில் நண்பர்களின் பக்கங்கள், போட்டோ, வீடியோ, சாட்டிங், மியூசிக் என பல வசதிகள் உள்ளன.

தொலைந்து போன நண்பர்கள் வட்டத்தை, இதன் மூலம் திரும்ப பெற முடிகிறது. இதில் நன்மை இருந்தாலும் எந்த ஒரு விஷயமும், அதன் எல்லையை மீறாத வரை மட்டுமே நன்மை பயக்கும். சமீப காலமாக பேஸ்புக் மூலம் பல மோசடிகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அறிவியல் முன்னேற்றம் என்பது வளர்ச்சிக்கு மட்டுமே பயன்பட வேண்டும். அப்போது தான் அந்த கண்டுபிடிப்பின் உண்மையான நோக்கம் நிறைவேறும். கண்காணிப்பு அவசியம்

பத்தாம் வகுப்பில் 450 மார்க் வாங்கியவர்கள் கூட, பிளஸ் 2 வில் குறைவான மதிப்பெண்ணே பெறுகின்றனர். இதற்கு விடுமுறை, ஓய்வு நேரத்தில் மணிக்கணக்கில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதே முக்கிய காரணம். மாணவர்களுக்கு, படிக்கும் காலத்தில், இதற்கான அவசியமே இல்லை என அறிவுறுத்துகின்றனர் கல்வியாளர்கள்.

பெற்றோர், பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர், மொபைல் போன் உள்ளிட்டவற்றை, வயதைப் பொறுத்து வாங்கி தர வேண்டும். இதன்மூலம் அவர்கள் வழிதவறி செல்கிறார்களா, என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களும், பள்ளிப் பருவத்தில், படிப்புக்கு தேவையானதை மட்டும் கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்த வேண்டும். மாறாக, சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி, எதிர்கால வாழ்க்கையை தொலைத்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

22 December 2015

இன்றைய கல்வி பார்வை: வாழ்வில் ஜெயிக்க வைப்பது எது?

மாணவர்களே, வாழ்வில் ஜெயிப்பதற்கு, வெறும் படிப்பு மட்டும் போதாது. பிறரிடம் நடந்து கொள்ளும் விதம், ஒழுக்கம், நடத்தை பண்புகள், போன்றவையே வாழ்வில் ஜெயிக்க வைக்கிறது.

வாழ்வில் ஏற்படும், குறைகள், தோல்விகள், பிரச்னைகள் ஒவ்வொன்றும், நமக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்புகள் என கருதுங்கள். என்னால் முடியும் என்ற மந்திரமே சாதனையின் திறவுகோல். ஒரு செயலை செய்யும் முன், "ஐயோ, அதெல்லாம் முடியாது" என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்கள் சாதிக்க மாட்டார்கள், நம்மையும் சாதிக்க விடமாட்டார்கள்.

எதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் நபர்களை, நண்பர்களாக கொள்ளுங்கள். அவர்களுடன் சேர்ந்து எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவ்வாக அணுகும் திறன் நமக்கு உண்டாகும்.

* இலக்கை தெளிவாக நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் சிந்தனையை இலக்கை, நோக்கியே செயல்படுத்துங்கள்.
* இலக்கு நிறைவேறுவதை, கற்பனையில் பாருங்கள்.
* நாம் செய்வது, உறுதியாக நடக்கும் என நம்புங்கள்.
* எந்த விஷயத்தையோ, பிரச்னையையோ, சிறப்பாக கையாளுங்கள்.
* பேசும் முன், பின் விளைவுகளை யோசியுங்கள்.
* நான் பெரியவன், தான் சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* சில நேரங்களில் சங்கடமான சூழ்நிலைகள் நேரும் என்பதை உணருங்கள்.
* நான் சொல்வது தான் சரி, செய்வதுதான் சரி என பிறரிடம் வாதிடாதீர்கள்.
* கேள்விப்படும் செய்திகளை, அப்படியே நம்பி விடாதீர்கள்.
* பிறருக்கு மரியாதை கொடுத்து, இதமான சொற்களை பயன்படுத்துங்கள்.
* பேச்சிலும் நடத்தையிலும், அடக்கத்தை பயன்படுத்துங்கள்.
* பிரச்னை ஏற்படும் போது, மற்றவர்கள் தான் பேச வேண்டும் என எதிர்பார்க்காமல், நீங்களே முதலில் பேசுங்கள்.

21 December 2015

இன்றைய கல்வி பார்வை: பள்ளிக்கு ஒரு நூலகம் அவசியம்

இணையதளம், மொபைல் என நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நமது தகவல் பரிமாற்றம் பெரிதும் வேகமாக வளர்ந்துள்ளது. எனினும் வாசிப்பது என்னும் பழக்கத்தின் நுட்பமான பயன்பாட்டை அதை அனுபவிப்பவர் மட்டுமே அறிவர்.

வாசிக்கும் பழக்கம் மூலமே பல தலைவர்கள் தங்களது அறிவை மேம்படுத்தியுள்ளனர் என்பதுற்கு பல சான்றுகள் உள்ளன.  ‘இளமையில் கல்வி என்ற பழமொழிக்கு ஏற்பட வாசிக்கும் பழக்கத்தையும் சிறுவயதில் இருந்தே தொடங்க வேண்டும்.  மாணவர்கள் அறிவைப் பெருக்குவதற்கு வகுப்றை புத்தகத்துடன் நுõலகத்தில் உள்ள புத்தகங்கள் பலவற்றையும் படிக்க வேண்டும்.

நுõலக பயன் பாட்டை ஒருவர் அறிந்துகொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப்பருவம் தான். பள்ளிப் பருவத்தில் நுõலக பயன்பாடானது சரியாக தொடங்கப்பட்டால் எதிர்கால பயன்பாடு மிக மிக முக்கியமானதாகும்.

பள்ளிகள் தங்களது நுõலகங்களை சரியான முறையில் மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து பல குறிப்புகளை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* வகுப்பறை நுõலகங்களில் குழந்தைகள் இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, படக்கதை, கற்பனைக் கதை, நகைச்சுவை, புதிர், நெடுங்கதை, வாழ்க்கைக் குறிப்பு, பரீட்சார்த்தக் கதைகள், இதழ்கள், நாளிதழ்கள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.

* மாணவர்களோடு கல்லுõரியின் நுõலகத்திற்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களை அவர்கள் பெறுவதற்கு உதவுவது மிக முக்கியம். வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்திற்கு உபயோகமான நுõல்களை ஆசிரியர்கள் நுõலகங்களில் முன் கூட்டியே வைத்திட வேண்டும்.

* நுõலகங்களில் ஆங்கில மொழி வாயிலான நுõல்களை மட்டும் வைக்காமல் பிற மொழி நுõல்களையும் வைப்பது மொழிகளின் இணையான அர்த்தத்தை உணர உதவுவதோடு குழந்தைகளுக்குத் தேவையான மொழிகளுக்
கிடையேயான பரிமாற்றத் தேவைகளையும் நிறை வேற்றும்.

* நுõலகங்களில் வாசிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குமாறு செய்ய வேண்டும். இது வகுப்பறை நேரத்துடன் இல்லாமல் வாசிக்க தனியான முக்கியத்துவத்துடன் தரப்பட வேண்டும்.

* படித்தது பற்றிய கருத்துக்களை அறிவதும் முக்கியம். வாய்மொழியாக அவை முதலில் பெறப்பட்டு பின்பு எழுத்து வடிவமாகவும் பெறப்படலாம்.

* தேவைக்கேற்ப புதிய புத்தகங்களை நுõலகத்திற்கு வாங்குவது மிக அவசியமான ஒன்று. இது போலவே புதிய இதழ்களும் பத்திரிகைகளும் வாங்கப்பட வேண்டும்.

* வகுப்பறையிலோ சிறிய குழுவிலோ புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதும் முக்கியமான செயல். புத்தகங்களை குழந்தைகளே தேர்வு செய்யச் சொல்வதும் அவசியமான ஒன்று. எதிர்பாராமல் புத்தகங்கள் கிழிந்துவிட்டால் குழந்தைகளே அதை சரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

* வகுப்பறை நுõலகங்களை நடத்துவது அதிக செலவு பிடிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பலகுழந்தைகள் பதிப்பகங்கள் செலவு குறைவான புத்தகங்களை வெளியிடுகின்றன. எனவே வகுப்பறை நுõலகங்களை ஏற்படுத்துமாறு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.