FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 January 2016

இன்றைய கல்வி பார்வை: தேவையா தேர்வு பயம்?

பொதுத் தேர்வை எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்கள் பெரும்பாலும் தேவையற்ற பதற்றத்தினாலேயே, குறைந்த மதிப்பெண்கள் பெறுவது, தேர்ச்சி பெறாமல் போவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்து முன்னரே கவலைப்பட துவங்கிவிடுவது, தேர்வு நேரத்தில் தேவையற்ற பயத்தை உண்டாக்குகிறது. சிறப்பாக தேர்வை எப்படி எழுதுவது என்பதை பற்றி மட்டுமே மாணவர்கள் சிந்திக்க வேண்டும். எதிர்மறையான எந்த சிந்தனைக்கும் மனதில் இடம் அளிக்கக்கூடாது என்றும் ஆலோசனை கூறுகின்றனர்.

கடைசி நேரத்தில் அடித்துப்பிடித்து படித்துக் கொள்ளலாம், என்ற சிந்தனையை அறவே தவிர்ப்பது நல்லது. சக மாணவர்களுடன் ஒப்பிடுவதையும் தவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் அவரவருக்கு தகுந்தாற்போல், திட்டமிட்டு படிக்க வேண்டும் என்கின்றனர்.

பாடங்களை புரிந்து படிப்பது, தேர்வு நேரத்தில் படித்தவை மறக்காமல் நினைவில் நிற்க உதவும். முக்கியமாக வகுப்பு ஆசிரியர்கள் கூறும் ஆலோசனைகளை, சரியாக பின்பற்றினாலே எளிதாக தேர்வை எதிர்கொள்ள முடியும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment