FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

Showing posts with label DEE PROCEEDINGS. Show all posts
Showing posts with label DEE PROCEEDINGS. Show all posts

27 April 2022

அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 & சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்(Awarding of Best School Shields to Government / Government Aided / Panchayat Union / Municipality / Corporation Primary / Middle Schools for the year 2020-21 - Proceedings of the Director of Elementary Education & Evaluation List for Selecting the Best School)...


சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்





அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்க சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்








3 August 2021

02.08.2021 முதல் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்







தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் _02.08.2021_ முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்




பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது. 




பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் , ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.




 இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் , தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet , Zoom , Teams , Whatsapp , Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும் . இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.




தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




 மேலும் மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் , மற்றும் ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


















1 July 2021

CSE & DSE PROCEEDINGS-அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்.


அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோரின் இணை செயல்முறைகள்.





13 June 2021

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்






தொடக்கக் கல்வி - தொடக்கப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல போக்குவரத்து செலவினத் தொகை அனுமதித்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!



9 May 2021

DEE PROCEEDINGS-BRIDGE COURSE & WORK BOOK - குறித்து இயக்குநர் புதிய உத்தரவு





பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் அறிவுரையின்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பயிற்சி கட்டகம் மற்றும் இரண்டாம் கட்டமாக பயிற்சிப் புத்தகம் காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

செய்யப்பட உள்ளதாக கால அட்டவணைபெறப்பட்டு உள்ளது எனவே அனைத்துமாணவர்களும் பயன்பெறும் வகையில் உரிய வழிமுறைகளைப்பின்பற்றி செயல்படும் பொருட்டு கால அட்டவணை இத்துடன்இணைத்து அனுப்பலாம் என்று அனைத்து மாணவர்களும்காணொளியை பார்த்து பயன் பெறுவதை உறுதிசெய்திட அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மை கல்விஅலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் இப்பொருள் சார்பாகஎடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை விவரஅறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

















25 January 2021

DSE PROCEEDINGS: பள்ளிக்கல்வி-72 வது குடியரசு தின விழா- அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி கொண்டாடுதல் சார்ந்து- பள்ளி கல்வி இயக்குநர் செயல்முறைகள் .நாள்:23.01.21


DEE PROCEEDINGS-30 Days English Training 15.2.2021 to 16.3.21





RIESI BANGALORE 30 DAYS TRAINING @ THE REGIONAL INSTITUTE OF ENGLISH SOUTH INDIA - FOR PRIMARY TEACHERS










DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial Learning Level Assessment ) - EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!


DSE PROCEEDINGS-கற்போம் எழுதுவோம் மையங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் பார்வையிடுதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்





கற்போம் எழுதுவோம் மையங்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் பார்வையிடுதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்







14 December 2020

DSE PROCEEDINGS : அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த கழிவறை அமைக்க தேவையான விவரங்களை கோருதல் சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் - ( ALL DISTRICT SCHOOL LIST AVAIL )


பள்ளிக்கல்வி பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு First Aid for Students and teachers (FAST ) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் & Mobile Application Direct link





பள்ளிக்கல்வி பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு First Aid  for Students and teachers (FAST ) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்- MOBILE APP DIRECT LINK & DIR.PRO AVAIL BELOW LINK- SHARE TO ALL