FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 February 2019

இந்தியாவிலேயே முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்ற பெண் வழக்கறிஞர்: பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது





அவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலைசீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி சிநேகா(34). இவர், திருப்பத்தூர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

சட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சிநேகா சாதி, மதம் அற்றவர்என திருப்பத்தூர்வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழைசமீபத்தில் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம்குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்றமுதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார். இந்ததகவலை அறிந்த பல்வேறு தரப்பினர் அவரை தொலைபேசிமூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.இது குறித்து சிநேகாவின் கணவர் பார்த்திபராஜாநாளிதழுக்கு கூறும்போது," கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டம் எனகூறலாம்.

நாங்கள் இருவரும் சாதி, மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள். எங்களது திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு தாலி மறுப்பு, சடங்குமறுப்புடன் தான் நடைபெற்றது. இந்த திருமண பந்தத்தின் மூலம்குடும்ப நலனுக்காக எங்கள்சொந்த நலனை விட்டு கொடுப்பதுஎன்றும், சமூக நலனுக்கான குடும்ப நலனை விட்டு கொடுப்பதுஎன்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். எனது மனைவிகுழந்தையாக பள்ளியில் சேரும்போது, சாதி மதம் அற்றவர்எனசான்றிதழ் பெற்று, சட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.எங்களுக்குஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என 3 பெண்குழந்தைகள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம்,பவுத்தம் (புத்தர்) ஆகிய மதங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம்அற்றவர்கள் என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்துள்ளோம்.

 

இதன்மூலம் அரசு இட ஒதுக்கீடு கிடைக்காது என்பது தெரியும். இடஒதுக்கீடு மீது அதிக நம்பிக்கை இருந்தாலும், சாதி, மதம் இல்லாமல்இருப்பது முக்கியமாக கருதினோம். அதன் அடிப்படையில் தான் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெறகடந்த 10 ஆண்டுகளாக போராடி, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் இதுபோன்றசான்றிதழ் கொடுக்க முடியாது எனக்கூறிய வருவாய்த்துறையினரிடம் பல்வேறு எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்து சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிழை பெற்றுள்ளோம்" என்றார்.

இதுகுறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தியிடம்கேட்டபோது, "சாதியை குறிப்பிடாமல் இதுவரை யாருக்கும் சான்றிதழ்வழங்கவில்லை. முதல் முறையாக வழக்கறிஞர் சிநேகாவுக்குசாதி,மதம் அற்றவர்என்ற சான்றிதழ் வருவாய்த் துறை மூலம்வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாணையில் இடம்உள்ளது. பல்வேறுஅரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பிறகே அவருக்கு சான்றிதழ்வழங்கப்பட்டுள்ளது.

 

சிநேகாவின் மூதாதையர்கள் சாதி,மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டுஆவணங்களை காட்டியுள்ளதால், அதன் அடிப்படையில் அவருக்குசான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சலுகைகள்அவருக்கு கிடைக்காது என்றாலும், இது போன்ற சான்றிதழ் வழங்கஅரசாணையில் இடம் உள்ளது" என்றார்.

No comments:

Post a Comment