FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 February 2019

அரசுப் பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியை மீது கத்தியால் தாக்குதல் ..! தாலி பறிப்பு

ஓசூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குள் புகுந்த முகமூடிகொள்ளையர்கள் தலைமை ஆசிரியரை கத்தியால் வெட்டி நகைமற்றும் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி ஒன்றியத்திற்குட்பட்டநாகசத்திரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிஉள்ளது. வியாழக்கிழமை மதியம் தலைமை ஆசிரியை கஜலட்சுமிமாணவர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

 

அப்போது முகமூடி அணிந்த படி கையில் கத்தி மற்றும்உருட்டுக்கட்டையுடன் நுழைந்த 2 பேர் ஆசிரியை கஜலட்சுமியை தாக்கமுயன்றனர். கையால் தடுத்ததால் அவருக்கு கையில் வெட்டுவிழுந்தது. அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க தாலிசங்கிலியை பறித்துக் கொண்ட கொள்ளையன் ஒருவன், அவரதுஸ்மார்ட் போன் மற்றும் கைப்பையில் இருந்து 3500 ரூபாய்ரொக்கப்பணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினான்.


இதைபார்த்த பள்ளியில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டதொழிலாளி ஒருவர், கொள்ளையர்களை தடுக்க முயன்ற போதுஅவரையும் கத்தியால் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்துதப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவமாணவிகள் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்திரண்டு வந்து ஆசிரியை மற்றும் பெயிண்டரை மீட்டு சிகிச்சைக்காகஅரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்

   

பள்ளிக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கைவரிசை காட்டுவதுஇதுவே முதல் முறை என்பதால் சம்பவம் தொடர்பாககாவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.


அந்தபகுதியில் நாளுக்கு நாள் வழிப்பறி கொள்ளையர்களின்அட்டகாசம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளநிலையில் அத்தலவாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றலட்சுமி நாராயணான் என்பவரை வழி மறித்து தாக்கியகொள்ளையர்கள் 15 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றதால் மக்கள்பணத்துடன் தனியாக வெளியே செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதுகாவல்துறையினர் ரோந்துபணியை தீவிரப்படுத்துவதோடு முகமூடிகொள்ளையர்களை கைது செய்து. மக்களின் அச்சம் போக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment