FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 October 2018

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை.! சென்னை வானிலை மையம் தகவல்.!

வங்கக்கடலில் உருவான டிட்லி புயல் நேற்று முன்தினம் அதிகாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளை பயங்கரமாக தாக்கியது. இரு மாநிலத்திலும் 4 மாவட்டங்களில் கடுமையான வெள்ளச்சேதம் உண்டானது.

புயல் கரையை கடக்காமல் காற்றழுத்த மண்டலமாக மாறி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்து. நேற்று இரவு ஒடிசாவின் கியோஞ்சர் நகருக்கு தெற்கே 70 கி.மீ தூரத்தில் நிலை கொண்டு இருந்தது.

இந்த காற்றழுத்த மண்டலம் இன்று மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதனால் ஒடிசா மற்றும் மேற்குவங்காள கடற்கரை மாவட்டங்களில் மழை தொடர்ந்து நீடிக்கும் என்றும் மணிக்கு 55 கி.மீ வேகம் முதல் 65 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.

இதற்கிடையே தமிழகம் மற்றும் புதுவையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, தேனி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment