திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த சிலநாட்களுக்கு முன் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. புதியஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும், இருபத்தி ஒரு மாதகால ஊதியக்குழுவில் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 5 ஆயிரம் அரசுபள்ளிகளை மூடுவது உடனடியாக கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அணி அணியாக வந்தஅவர்கள், சேப்பாக்கத்தில் இருந்து பேரணியாகச் சென்று தலைமைச்செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது தடையை மீறிமுற்றுகையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திகைது செய்தனர்.
*இதனையடுத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம்தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அடுத்தகட்ட போராட்டம் குறித்துபிறகு அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள்தெரிவித்தனர். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சேலத்தில் கூட்டாகதெரிவித்துள்ளனர் .


No comments:
Post a Comment