தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள்கலைக்கப்பட்டு , அக் .,1 முதல் மாவட்ட தேர்வுத்துறைஅலுவலகங்களாக செயல்படவுள்ளன . கல்வித்துறையில்1975 ல் தனி இயக்குனரகமாக தேர்வுத்துறை உருவானது . சென்னை , மதுரை உட்பட 7 மண்டல அலுவலகங்கள்துணை இயக்குனர் கீழ் செயல்பட்டன .
இதன் மூலம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள்உட்பட 40 வகை தேர்வுகள் நடத்தப்படுகின்றன . தேர்வு முடிவு, மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டல் , விடைத்தாள் நகல்வழங்கல் பணிகளில் இத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர் . தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர் எண்ணிக்கைஅதிகரிப்பதால் , மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டுமாவட்ட அலுவலகங்கள் துவங்கப்படுகின்றன .
இதற்காக புதிதாக உதவி இயக்குனர் , கண்காணிப்பாளர் , உதவியாளர் , இளநிலை உதவியாளர்நியமிக்கப்படவுள்ளனர் . அதிகாரி ஒருவர் கூறுகையில் , 'அக் .,1 முதல் 32 மாவட்டங்களிலும் புதிய அலுவலகங்கள்செயல்பட சி . இ . ஓ ., க்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது ,' என்றார் . மதுரையில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஆர் . எம் . எஸ்., ரோட்டில் செயல்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் , தேர்வுத்துறை அலுவலகமாக செயல்படும் .

No comments:
Post a Comment