FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 September 2018

அக்டோபர் 2 வரை பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ; சிறப்பு வகுப்பு நடத்த அதிகாரிகள் தடை

தமிழக பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பள்ளிகளில் இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை பள்ளிகளில் 10ம் வகுப்பு , பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்தது. 


அதே போல் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வும் முடிந்தது. இதையடுத்து இன்று முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 100 சதவீத மாணவர் தேர்ச்சிக்காக, விடுமுறை நாட்களில் 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.


பிளஸ்1 மதிப்பெண்ணுடன் இணைந்த ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நடைமுறை திரும்ப பெறப்பட்டு, பிளஸ்2 மதிப்பெண் மட்டுமே கொண்ட மதிப்பெண் பட்டியல் வெளியிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதையும் நடத்தக்கூடாது என்று பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment