FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 August 2018

முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு -வட்டார, நகரக்கிளை தலைநகரங்களில் மௌன ஊர்வலம் நடத்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு வேண்டுகோள்

இந்திய தேசம் முழுவதையும் சோகத்துக்குள்ளாக்கிய முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவு ஆசிரியர் இனமான நம்மையெல்லாம் பேரதிர்ச்சிக்கும், தீராத வேதனைக்கும் உள்ளாக்கிருக்கிறது. 

தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன் வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய தமிழ்நாட்டின் தலைமகன் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். 


ஆசிரியர்களை அரவணைத்து அன்பு காட்டிய அப்பெருமகனார்க்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அனைத்து வட்டார, நகரக் கிளைகளும் அஞ்சலி செலுத்தும் விதமாக வட்டார, நகரக்கிளை தலைநகரங்களில் திரளாக ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்து மெளன ஊர்வலம் நடத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறது

.

துக்கம் அனுசரிக்க அரசு அறிவித்துள்ள 7 நாட்களுக்குள் பள்ளி வேலைநாட்களில் மாலை 5 மணிக்கும், விடுமுறை நாளில் வசதியான நேரத்தையும் முடிவு செய்து ஆசிரியர்களுக்கு உடனே தகவல் தெரிவித்து சிறப்பாக நடத்தவும், 


ஊர்வலத்தின் போது கருப்பு பேட்ஜ் அணிந்தும், 


பெரிய கறுப்புக் கொடியும், 


கலைஞரின் திருவுருவப் படமும், 


நமது அமைப்பின் பெயர் தாங்கிய ஃப்ளக்ஸ் –ம்


 பிடித்துக் கொண்டு ஆசிரியர்கள் ஊர்வலத்தில் பங்கேற்று நம் ஆசிரியரினத்தின் அஞ்சலியை செலுத்த வேண்டும்.

                                                      இங்ஙனம்,

                     தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்,

                                    தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment