FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 August 2018

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்டு 16 முதல் வழங்கப்படும்

2018-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வரும் ஆக. 16 முதல் துவங்குவதாக தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் சான்றிதழ் பெறுவது தொடர்பான தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி இன்று விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு: “நடைபெற்று முடிந்த மார்ச் / ஏப்ரல் 2018- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவ மாணவியருக்கும், தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழை, வரும் ஆகஸ்டு 16-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பெற்றுக்கொள்ளலாம். 


தனித்தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.” இவ்வாறு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment