FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 July 2018

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கு ஒருநபர் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக எம்.ஏ. சித்திக் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளையும், ஊழியர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை வழங்க உள்ளது. 
இந்தக் குழுவின் சார்பில் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம், சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி விலிங்டன் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 
இதில் பங்கேற்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்பட கருத்துத் தெரிவிக்க விண்ணப்பித்த பல்வேறு ஆசிரியர் கூட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கூட்டமைப்பின் சார்பில் இருவர் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment