FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

30 July 2018

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயம்

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது. 
இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். 

கடந்த ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டை ஆன்லைன் மூலம் வழங்கலாம் என்றும் காப்பீட்டு காலத்தை 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. 

இதன் அடிப்படையில் விதிமுறைகளை வகுத்துவரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது புதிய வாகனங்களை வாங்கும்போது ஓராண்டுக்கான காப்பீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதன் பிறகு வாகன உரிமையாளர் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் தற்போது கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனங்களால் ஏற்படும் இழப்புக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது. 

No comments:

Post a Comment