FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 December 2017

கணினி ஆசிரியர்களின் மாநில மாநாட்டிற்கான பொதுக்குழு கூட்டம்..

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஜனவரி, 7ல், ஈரோடு மல்லிகை அரங்கத்தில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டிற்கான மாவட்ட சங்க ஆயத்த பொதுக்குழு கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. மாநில துணைத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தயாளன், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், புதிய வரைவு பாடத்திட்டத்தில், கணினி அறிவியல் பாடத்தை, மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை, ஒரு தனிப்பாடமாக கொண்டுவர வேண்டும். தமிழக அரசால் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட, 765 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் நவீன கணினி ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில், கணினி ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஸ்வர்ணராணி தீர்மானங்களை விளக்கி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகரன், சுபா, தீபாராணி, நவிதாபானு, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்...

நன்றி:தினமலர்

No comments:

Post a Comment