FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 December 2017

ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, இரண்டாம் பருவத் தேர்வு விடுமுறையில், நான்கு நாட்கள் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ' எனும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், செப்., 7 - 15 வரை, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. இதில், தொடக்கக் கல்வித் துறையில், பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


நீதிமன்றம் தலையிட்டு, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. அப்போது, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு இணையாக, விடுமுறை நாட்களில், பணி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.


துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது, இரண்டாம் பருவத் தேர்வு முடிவடைந்து, ஜன., 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு, டிச., 27 - 30 வரை, கணினி பயிற்சி வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.ஆசிரியர்களின் தேவைக்கேற்ப, வகுப்பறைகள் மற்றும் பயிற்சிகளை வழங்க, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment