FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 February 2017

பள்ளிகளில் பாதுகாப்பு பலப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தேர்வுகள் துவங்கும் நிலையில், பள்ளியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த, ஆசிரியர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து, விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, அவை மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில், மாணவர்கள் குளிப்பதை தவிர்க்க, அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளியை விட்டு செல்லும் போது, பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில் செல்வதோ கூடாது என, எச்சரிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில், மரங்கள் விழும் நிலையில் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளதாக என்பதை யும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதுபோன்று, பல, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment