FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 February 2017

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வடிவம் அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு

ஸ்மார்ட்' ரேஷன் கார்டின் வடிவத்தை இறுதி செய்ய, தமிழக அரசின் ஒப்புதலுக்காக, உணவுத் துறை காத்திருக்கிறது. தமிழக அரசு, தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஏப்ரல் முதல், ஸ்மார்டு கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏப்., முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதன் வடிவத்துக்கு, இதுவரை அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.  


இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கையடக்க வடிவில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுவது உறுதி. அதில், குடும்ப தலைவரின் புகைப்படம், முகவரி என, இடம் பெற வேண்டிய விபரங்கள் குறித்து, உணவுத் துறை செயலகம் வழியாக, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை, அனுமதி கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்ததும், அதற்கான மென்பொருள் விரைவாக தயாரிக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment