நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்களுக்கான சேவை கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள மக்கள், தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், ஏடிஎம் மையங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வராத சூழலும் நிலவுகிறது. நாடு முழுவதும் ஏடிஎம் மையங்கள் சீராக குறைந்தது 2 வார காலமாகும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இந்தநிலையில், வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் ஏடிஎம் மையங்கள் மூலம் மேற்கொள்ளும் பணபரிவர்த்தனைகளுக்கான சேவைக்கட்டணம் வரும் டிசம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
14 November 2016
RBI-ORDER COPY-ஏடிஎம் சேவை கட்டணங்கள் டிசம்பர் 30 வரை முழுமையாக ரத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment