FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 October 2016

கெலமங்கலம் வட்டாரச் செய்தி

_*🔷🔹TNPTF விழுதுகள்🔹🔷*_

*கெலமங்கலம் வட்டாரச் செய்தி*

கெலமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலரின் மிரட்டல் போக்கு, பாரபட்ச செயல்பாடு, அலுவலக பிரச்சினைகள் & நிர்வாக முரண்பாடுகள் குறித்து பேசி ஒரு சுமூக சூழலை வட்டாரத்தில் ஏற்படுத்திடும் நோக்கில் TNPTF செயற்குழு முடிவின்படி AEEOவை சந்திக்க வட்டார பொறுப்பாளர்கள் தொலைபேசியில் 3 நாட்களாய் அழைத்தும் பேசாத AEEO, நம்மை சந்திக்கக் கூடாதென்ற முடிவில் இருந்ததால் நேரடியாக பேசும் பொருட்டு நேற்று நமது சங்க உறுப்பினர்கள் 50 பேர் அலுவலகம் சென்றோம்.

மாலை 5 மணியளவில் அலுவலகத்தில் AEEO இல்லாத காரணத்தால் செயற்குழு தீர்மானத்தின் படி காத்திருப்பது என முடிவெடுத்து அலுவலக ஊழியர் வழி AEEOவிற்கு பேசிய வட்டார செயலாளரிடம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருங்கள் வரமுடியாது எனக் கூறி போனை வைத்துவிட்டார். எனவே AAEEO விடம் தகவலை தெரிவித்து ஆசிரியர்கள் அலுவலகத்திலேயே காத்திருக்க தொடங்கினோம்.

6 மணியளவில் காவல்துறை CID அலுவலகம் வந்து பிரச்சினை குறித்து விசாரித்தார். மேலதிகாரிகளுக்கு தகவல்கள் சென்றன. TNPTF மாநில பொறுப்பாளர்கள் கவனத்திற்கு விஷயத்தை எடுத்து சென்று அவர்கள் வழிகாட்டல்கள் பெறப்பட்டன. மாநில நிர்வாகிகளின் வாழ்த்துக்களும் துணையும் தேவைப்பட்டால் இயக்குநரிடம் எடுத்துசெல்வது என்ற உறுதியும் புத்துணர்வூட்டின. மேலும் நமது தோழமை இயக்கமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொறுப்பாளர்களும் உறுதுணையாய் நம்பிக்கை அளித்தனர். இதற்கிடையில் DEEO நமது மாவட்டத் தலைவரிடம் தொலைபேசியில் பேசி கோரிக்கைகளை தான் முடித்து தருவதாக கூறி களைந்து செல்ல வலியுறுத்தினார். ஆனால் சங்கத்தை மதிக்காமல் காத்திருந்தாலும் வரமாட்டேன் என்று ஆணவமாய் பதிலளித்த AEEO, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அவர்தான் எங்களை பேச அழைக்க வேண்டும் எனக் கூறி பேச்சுவார்த்தைக்கு வந்த எங்களை அவமதித்து பேசி பிரச்சினையை பெரிதுபடுத்திய AEEO வே இதற்கு முழு காரணம் என்பதை தெளிவுபடுத்தியதும் DEEO, AEEO வை எங்களிடம் பேச வைப்பதாக உறுதியளித்தார். காவல்துறை SI & CID மூலம் CEOவிற்கும் பிரச்சினை தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இரண்டு மணி நேரமாக பேசாத AEEO சிறிது நேரத்தில் 7 மணியளவில் தொலைபேசியில் வட்டார செயலாளரிடம் "தான் பேசியது தவறு, நாளை நேரில் பேசலாம், அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று பரிசீலிக்கிறேன்" என்று உறுதியளித்தார். சங்கத்திடம் பேச மாட்டேன் என்ற நிலையை மாற்றி தானாக பேசும் நிலையேற்படுத்திய நமது வலிமையை, ஒற்றுமையை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். TNPTF போராட்ட பதாகையின் கீழ் அணியமாவதை கர்வமாய் உணர்கிறோம்.

நெஞ்சில் மூண்ட பெருநெருப்பு போராட்டமாய் பற்றிஎரிகையில் ஆணவங்கள் தூள்!தூள்!
அதிகாரங்கள் தூள்!தூள்!

சிறுதுளிகள் பெருவெள்ளமானால்....
காட்டாறாய் வெளிப்படும் என உணர்த்திய தோழர்கள் அத்தனை பேருக்கும் குறிப்பாய் இறுதிவரை உடன்நின்ற பெண் ஆசிரியர்களுக்கும் வட்டார மாவட்ட மாநில கிளையின் சார்பாய் தோழமை கலந்த நன்றிகள்.
உங்கள் ஒத்துழைப்பு இன்றும் தொடர வேண்டும்.
இன்றைய பேச்சுவார்த்தையில் சங்கத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்.

என்றும் உங்கள் வருகையை எதிர்நோக்கி..
இன்றும் மாலையில் அலுவலகம் நோக்கி.....

- ஆ.விஜயகுமார்,
மா.த - கிருஷ்ணகிரி.

No comments:

Post a Comment