புதுடில்லி: 'இந்தாண்டு, இயல்பு நிலைக்கு அதிகமாக பருவமழை பெய்யும்' என, ஐ.எம்.டி., எனப்படும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, தொடர் வறட்சி காணப்பட்ட நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு, விவசாயம் மற்றும்
பொருளாதாரத்துறைக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.
நாட்டில், கடந்த இரு ஆண்டுகளாக, பெரும்பாலான மாநிலங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது. கடந்த ஆண்டில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரலாறு காணாத மழை, வெள்ளம் ஏற்பட்ட போதும், பிற மாநிலங்களில் வறட்சியே நிலவியது. இதன் தொடர்ச்சியாக, 'மூன்றாவது ஆண்டாக, நடப்பு ஆண்டி லும், வறட்சி நீடிக்கலாம்' என்ற அச்சம், விவசாயிகள் மத்தியில் நிலவி வந்தது.
106 சதவீதம்
இந்நிலையில், இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் லஷ்மண் சிங் ரத்தோர், நடப்பாண்டுக்கான பருவமழை முன்கணிப்பு அறிக்கையை, டில்லியில் நேற்று வெளியிட்டார்; அப்போது அவர் கூறியதாவது:
நடப்பாண்டில், பருவமழையின் நீண்டகால சராசரி விகிதம், 106 சதவீதமாக இருக்கும். இயல்பு நிலை அல்லது அதற்கு கூடுதலான பருவ மழை பெய்வதற்கான வாய்ப்பு, 94 சதவீதம் உள்ளது. பொதுவாக, நாடு முழுவதும், பரவலாக மழை பெய்யும்.
தமிழகத்தில்...இருப்பினும் , வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில்,இயல்பு நிலைக்கு சற்று குறைந்தளவு மழை பொழிவு இருக்கலாம். குறிப்பாக, தமிழகத்தில், இந்த நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்.வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, மஹாராஷ்டிர மாநிலத்தின், மராத்வாடா பகுதியில், இந்தாண்டு, நல்ல மழைப்பொழிவுகாணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ஸ்கைமெட்' கணிப்பு
'நடப்பு நிதியாண்டில், இயல்பு நிலைக்கு அதிகமான பருவமழை இருக்கும்' என, 'ஸ்கைமெட்' எனப்படும், அரசு சாரா வானிலை முன்கணிப்பு மையம் கணித்துள்ளது.
'ஸ்கைமெட்' கூறியுள்ளதாவது:நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும். நீண்டகால சராசரியை ஒப்பிடுகையில், பருவமழை, 105 சதவீதமாக இருக்கும். இந்த கணிப்பின் பிழை விகிதம், நான்கு சதவீதம் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். இவ்வாறு ஸ்கைமெட்கூறியுள்ளது.
ஸ்கைமெட் நிறுவனம், 2009ல், நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவும் என, மிகச்சரியாக கணித்தது. இருப்பினும், 2015ல், இதன் கணிப்பு பொய்த்துப் போனது.
சராசரி மழை எது?
நீண்டகால சராசரிக்கு, 90 சதவீதத்துக்கு குறைவான அளவு மழை பெய்தால், பற்றாக்குறை பருவமழையாக கருதப்படுகிறது; 90 - 96 சதவீதமாக இருந்தால், இயல்பு நிலைக்கு கீழான பருவமழை. 96- 104 சதவீதமாக இருந்தால், சராசரி மழையாக கருதப்படும். 104 - 110 சதவீதமாக இருந்தால், இயல்பு நிலைக்கு கூடுதலான பருவமழையாக, வானிலை ஆராய்ச்சி மையத்தால் விவரிக்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 15 சதவீதம், விவசாயத்தின் பங்களிப்பாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் , 60 சதவீதம் பேர், விவசாயத்தை சார்ந்துள்ளனர். விவசாய நிலங்களில், 40 சதவீதம் மட்டுமே, போதிய பாசன வசதிகளுடன் உள்ளன.
மோசமான பருவமழையால், 2015 - 16 நிதியாண்டில், 10 மாநிலங்கள், வறட்சியால் பாதிக்கப்பட்டவையாக அறிவித்துக் கொண்டன. அவற்றின் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளுக்காக, மத்திய அரசு, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது.
விவசாய பங்குகள் விர்ர்...
ஸ்கைமெட், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆகியவை, 'இயல்பு நிலைக்கு அதிகளவில், பருவமழை பெய்யும்' என கணித்ததை அடுத்து, விவசாயம் சார்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு, நேற்று கிராக்கி காணப்பட்டது. ராலிஸ் இந்தியா, யு.பி.எல்., அத்வந்தா, மான்சான்டோ, பி.ஐ.இண்டஸ்ட்ரீஸ், இன்செக்டிசைட்ஸ் இந்தியா, ஜெயின் இரிகேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள், 2.5 முதல் 14 சதவீதம் வரை, விலை ஏற்றம் கண்டன.
உர உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களான, கோரமண்டல் இன்டர்நேஷனல், பேக்ட், ஆர்.சி.எப்., சம்பல் பெர்டிலைஸர் ஆகியவற்றின் பங்குகள், 2.5 முதல் 3.5 சதவீதம் வரை விலை ஏற்றம் அடைந்தன.

No comments:
Post a Comment