தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர் தலைமையில் இயக்க பொறுப்பாளர்கள் நேற்று(15.4.2016) மாலை 7 மணி முதல் 9 மணி வரை மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து பல முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் நமது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
சந்திப்பில் உறுதியளித்த சில முக்கிய கோரிக்கைகள்...
1. முன் அனுமதியில்லாமல் உயர் கல்வி பயின்றவர்களுக்கு பின்னேற்பு வழங்க உடனடியாக உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார்.
2. பி.காம்.பி.எட்., மற்றும் உயர்கல்வி பயின்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பி.லிட்., முடித்து பட்டதாரி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்த்து உடனடியாக ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிடுவதாக உறுதியளித்துள்ளார்கள்.
3. ஒரு சில மாவட்டங்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வு வினாத்தாள்களை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகமே மாவட்டம் முழுமைக்கும் வழங்குவதாக நாம் முன் வைத்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். வினாத்தாள் வழங்கும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
4. பொதுச்செயலாளரால் மாநிலம் முழுமைக்கும் மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பிரிவு அலுவலர்களை முடுக்கி விட்டார்.
நீண்ட நேரம் நடந்த இச்சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் அவர்களிடம் அலைபேசி வழி தகவல் பெறப்பட்டு சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் அவர்களால் பகிரப்படுகிறது.

No comments:
Post a Comment