"ஒவ்வொரு மாணவரும் உயர்ந்த இலக்குகளை தங்களது லட்சியமாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா பேசினார்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இளநிலை, முதுகலை, எம்.ஃபில்., உள்ளிட்ட படிப்புகளை முடித்த, 1,500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் மீனா, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: கல்விக்கு என்று குறிப்பிட்ட காலக்கட்டம் என்பது இல்லை. எனவே, மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் உயர்ந்த இலக்குகளை தங்களது லட்சியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இலக்கை அடைந்தவுடன், அடுத்த இலக்கு ஒன்றை குறிக்கோளாக கொள்ள வேண்டும். மாணவர்களிடம் சமூக உணர்வு மற்றும் பற்று இருத்தல் வேண்டும். அவற்றை ஆசிரியர் மேம்படுத்த வேண்டும். ஒரு சில மாணவர்களிடம் பல்வேறு திறன்கள் இருந்தாலும், ஒவ்வொரு மாணவரிடத்தும் ஒரு தனித்திறன் இருக்கிறது. அதை ஆசிரியர்கள் கண்டறிந்து, மேம்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment