மாணவர்கள் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்தால் வாழ்வில் எளிதில் சாதிக்கலாம். எதிர்மறையான எண்ணங்கள் மனிதனை நல்வழியில் சிந்திக்க விடுவதில்லை. இதனால் வாழ்க்கைப் பாதையே மாறிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே எதிர்மறையாக சிந்திப்பதை விட்டுவிட்டு எதையும் நல்ல நோக்கத்துடனேயே பார்ப்பது நன்மையைத் தரும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கும் சில வழிமுறைகளைக் காண்போம்.
* பெரிய வேலை ஏதாவது கொடுக்கப்பட்டால், செய்ய முடியாது என்றோ, யார் செய்வது என்றோ எண்ண வேண்டாம். எந்த வேலையாக இருந்தாலும் அதை திட்டமிட்டு பிரித்து செய்தால் எளிதில் முடிக்கலாம். கொடுத்த வேலையை முடிக்கும்போது மிகப்பெரிய திருப்தி ஏற்படும். இதனால் எண்ணம் நல்வழியில் திரும்பும்.
* மனிதனுக்கு கடினமான நேரங்கள் எப்பொழுதுமே ஏற்படுவதில்லை. அது எப்போதாவது வரும், போகும். இந்த மாதிரி அனுபவங்கள் தான் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. சிக்கலான சூழ்நிலையின் போது மனம் தளராமல், அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.
* தீய எண்ணங்கள் கொண்ட நண்பர்களின் நட்பை துண்டித்து விடுங்கள். இயல்பாக பழகும் நபர் யாராக இருந்தாலும் நட்பு கொள்ளுங்கள். நல்ல நட்பு ஒருவனை நல்வழியில் அழைத்துச் செல்லும்.
* என்னால் முடியாது என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். எதையும் செய்ய முடியும் என எண்ணுங்கள். ஒரு செயலை செய்ய முடியாவிட்டாலும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யுங்கள்.
* ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக போக்குங்கள். நல்ல இசை கேட்பது, பயணம் செய்வது, விளையாட்டு ஆகியவை எண்ணங்களை வலுப்படுத்தும்.
* தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் சலிப்பு ஏற்படும். ஏதாவது புதிய முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
* ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப அனைவரிடமும் ஒத்துப்போக வேண்டும். வீணான விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இந்த மாதிரியான செயல்பாடுகளால் மாணவர்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேறலாம்.

No comments:
Post a Comment