FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 November 2015

இன்றைய கல்வி பார்வை: குறிப்பெடுக்க கற்றுக் கொள்ளுங்கள்

பாடப்புத்தகத்தை முழுமையாக படித்து கிரகித்தல் என்பதுசிலருக்கு கைவந்த கலை. ஆனால் பலருக்கு அது,அலுப்பையும், சோர்வையும் தரக்கூடிய விஷயமாகஇருக்கிறது. ஏனெனில் நிறைய அத்தியாயங்களையும்,விஷயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது அது. எனவேஇதுபோன்ற சூழலில் எளிமையாக படிப்பதற்கு என்ன வழிஎன்பதை யோசிக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் அந்தநுட்பத்தை தெரிந்துவைத்துக் கொண்டால், புத்தகத்தோடுமல்லுகட்டாமல், எளிய முறையில் படிக்க முடியும்.

குறிப்பெடுத்தல் என்பது உங்களின் படித்தல்செயல்முறையில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம். பலவிஷயங்களை எளிமையாக புரிந்துகொள்ள அந்தசெயல்பாடு உதவுகிறது. உங்களின் பள்ளி மற்றும் கல்லூரிநாட்களில் அந்த பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், நீங்கள்பலவகையிலும் பயன்பெறுவீர்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது அவர்கூறுவதை குறிப்பெடுத்துக் கொள்ளலாம். பல தேர்வுகளில்உங்களின் ஆசிரியர்தான், உங்களது விடைத்தாளை திருத்திமதிப்பெண் இடுபவர். அவர் அந்த பாடத்தில் ஏதாவது ஒருவிஷயத்தின்பால் கவரப்பட்டிருப்பார். பாடம் நடத்துகையில்அந்த விஷயத்தை அவர் திரும்ப திரும்ப சொல்லுவார்.எனவே அது, எது என்பதை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும். தேர்வில், அந்த குறிப்பிட்ட விஷயத்தைமுக்கியத்துவம் கொடுத்து நீங்கள் எழுதும்போது உங்களுக்குமதிப்பெண் அதிகம் கிடைக்கம்.

மேலும் வகுப்பறையில் அவசர அவசரமாக எடுத்தகுறிப்புகளை, வீட்டில் அமர்ந்து தெளிவாக எழுத வேண்டும்.இதன்மூலம் நீங்கள் 2 நன்மைகளை பெற முடியும்.நடத்தப்பட்ட பாடத்தை ரிவிசன் செய்த மாதிரியும் இருக்கும்மற்றும் நல்ல ரெபரன்சாகவும் பயன்படும். மாணவர்கள்தாங்களே சொந்தமாக எடுத்த குறிப்புகளை படிப்பதேசிறந்தது. மேலும் அந்த குறிப்புகளுடன் உங்களின் சொந்தஎண்ணங்களையும் சேர்க்கலாம்.

ஒரு விரிவுரையில் நீங்கள் அமர்ந்து குறிப்பெடுக்கும்போது,அந்த உரையை புரிந்து, இணைந்து செல்ல குறிப்பெடுத்தல்உதவுகிறது. மேலும் குறிப்பை உங்களின் சொந்தகையெழுத்தில் எடுக்கும்போது, அதை திரும்பவாசிக்கையில், என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை சரியாகஅறிந்துகொள்ள முடியும்.

மேலும் அந்த குறிப்பில் புதிய வார்த்தைகளும், புதியகருத்துக்களும் சேர்க்கப்பட வேண்டும். தேர்வு நேரத்தில்உங்களின் குறிப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.அவை ஒரு சிறந்த ரெபரன்சாக பயன்படும்.புத்தகத்திலிருந்து சிறப்பான வகையில் குறிப்பெடுக்கசிறிது நாட்கள் பழக வேண்டும். இதில் இன்னொரு முக்கியவிஷயம் என்னவெனில், பிறரின் தனிப்பட்ட குறிப்பைபயன்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment