FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 November 2015

இன்றைய கல்வி பார்வை: கற்பதற்குத்தான் வாழ்க்கை....

எப்போதுமே கற்றுக்கொண்டே இருப்பவர்தான் சிறந்த மாணவர்.எப்போதுமே கற்றல் என்றால், பாடப்புத்தகத்தை சதா தூக்கிக்கொண்டேஅலைபவர் என்று பொருளல்ல. மாற்றங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்வதும்,தோல்வியிலிருந்து வெற்றியின் ரகசியத்தை கற்றுக் கொள்வதும், தனதுமுயற்சியில் புதுமையை புகுத்துவதுமே ஆகும். மொத்தத்தில் இதுதான் வாழ்வின் ரகசியம். இந்த பண்புகள்இருந்தால், ஒருவர் வெல்லமுடியாதவராக இருப்பார்.

உதாரணமாக, எய்ட்ஸ் கிருமியை எடுத்துக்கொண்டால் அதை இதுவரை வீழ்த்த முடியவில்லை. அதற்குகாரணம் இதுதான். நமது ரத்த செல்களுடன் அது தனது தன்மையை மாற்றி, செல்லோடு-செல்லாக ஒட்டிக்கொள்கிறது. எனவேதான் அதை அழிக்க முற்பட்டால் செல்லும் சேர்ந்து அழிந்துவிடும். இதனாலேயே எய்ட்ஸ்வைரஸை ஒழிக்க இன்றுவரை இயலவில்லை. இதிலிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள நிறையஇருக்கிறது.

நாமும், சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது. அதேநேரத்தில்மாணவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். உலகத்தின் நன்மைக்காகவே மாணவர்கள் தங்களின்திறனை பயன்படுத்த வேண்டுமே ஒழிய தீமைக்காக அல்ல. நீதிநெறிப்படி நடக்க, மாணவர்கள் உறுதிஎடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டால், அதற்கு என்ன காரணம் என்று முதலில் யோசிக்க வேண்டும்.உங்களின் முயற்சியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி ஆராய வேண்டும். தேவையானமாற்றங்களை செய்யும்போது பலன் சிறப்பானதாய் இருக்கும். நாம் என்ன தவறு செய்தோம், அதனால் என்னமாதிரியான விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன என்பதை ஆராய்ந்து, நம்மை மாற்றிக்கொண்டால், நாமேசிறந்த மாணவர்.

வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் சுயசரிதையை படித்தால் உங்களுக்கே புரியும். அவர்கள் எவ்வாறு காலஓட்டத்தில் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு, புதுபுது விஷயங்களை முயன்றார்கள் என்பதுஉங்களுக்கு தெரியும். அதன்மூலம் அவர்கள் பெற்ற வெற்றியைப் பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

கற்றல் என்பது வாழ்க்கை முழுவதற்குமானது. அதை ஒரு சிறந்த மாணவர் நன்கு புரிந்துகொள்வார்.வாழ்க்கை என்பது வகுப்பறைக்கு வெளியே உள்ளது என்பதையும் அவர் புரிந்து கொள்வார். எனவே அவர்வகுப்பறைக்கு வெளியே என்ன கற்றுக் கொள்கிறாரோ, அதுவே அவரது வெற்றியை தீர்மானிக்கிறது.

No comments:

Post a Comment