FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 November 2015

மாற்றுத் திறனாளிகள் என போலி சான்றிதழ் கொடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ேபரூராட்சிகளில் பணியில் சேர்ந்த மேலும் 407 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளனர்.

புளியங்குடி : மாற்றுத் திறனாளிகள் என போலி சான்றிதழ் கொடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ேபரூராட்சிகளில் பணியில் சேர்ந்த மேலும் 407 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்களில் கடந்த 2011ல் அலுவலக உதவியாளர் முதல் பணி ஆய்வாளர் வரை ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், இனச்சுழற்சி ஆகியவற்றில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்ததாக புகார் வெளியானது.

நெல்லை மாவட்டத்திலும் 500க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் கொடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் வேலையில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவக்குழு பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மாற்றுத் திறனாளிக்கான தகுதி இல்லாமல் பணி நியமனம் செய்யப்பட்ட 108 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுமூப்பு, முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சிகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் உள்ளாட்சி பணிக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட சுமார் 2 ஆயிரம் பேரின் சான்றிதழ்கள், பதிவுமூப்பு, முன்னுரிமை, வேலை வாய்ப்பு அலுவலக அட்டை ஆகியவற்றை சோதனை செய்தனர். இதில் 515 பேர் முறைகேடாக வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. இவர்கள் ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை என கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இப்படி முறைகேடாக பணியில் சேர்ந்த மேலும் 407 பேர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது நெல்லை மாவட்ட அரசு ஊழிர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment