FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 April 2022

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.












100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , தமிழ் அறிஞர்கள் , தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் , பல்துறை சாதனையாளர்கள் , அறிவியல் அறிஞர்கள் கல்வி பயின்ற பள்ளியை கண்டறிந்து , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . மேலும் , அப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் . ஆகவே , அப்பள்ளியின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



தங்கள் மாவட்டத்தில் , அரசு பள்ளிகளில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் உரிய முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் , புராதான கட்டடங்களை ( Heritage building ) சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்


No comments:

Post a Comment