2017-18 ஆண்டிற்கானபள்ளிக்கல்வித்துறைமானியக் கோரிக்கையின்போது சட்டமன்றப்பேரவையில் அறிவித்தபடிதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ்மையப்படுத்தப்பட்ட படப்பதிவுநிலையமாக கல்வித்தொலைக்காட்சி மிகநவீனமாகஉருவாக்கப்பட்டுள்ளது.
1. மனித வளம் உயர்ந்தோங்க
நாளைய சமுதாயம்நிறைவடைய
தொலைகாட்சிகளில்முன்னோடியாக
உலகளவில் முதன்முறையாககல்வித் துறைகல்வியாளர்கள் உருவாக்கிய
கல்விக்கென சிறப்புதொலைக்காட்சி
தமிழக அரசின் கல்வித்தொலைக்காட்சி.
2. தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் டிஜிட்டல்வழி- கல்விக்கான கல்வி,புரட்சி கல்வித்தொலைக்காட்சி.
3. மழலையர் முதல்முதல்நிலை பட்டப்படிப்புபடிக்கும் மாணவர்களுக்கானநிகழ்ச்சிகளைத் தயாரித்துவழங்குகிறது கல்வித்தொலைக்காட்சி
4. வல்லுநர்கள்,கல்வியாளர்கள், மனிதவளவளர்ச்சியில் சிறந்துவிளங்கும் முன்னோடிகள்அனைவரும்ஒருங்கிணைந்து, பாடத்திட்டம்சார்ந்த கருத்துக்களையும்,போட்டித் தேர்வுகளுக்கானவிளக்கங்ளையும் மனிதமேம்பாட்டிற்கான வாழ்க்கைவழிகாட்டிகளையும் ஆழமானபுரிந்துணர்தலையும்ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக கல்வித்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்வடிவமைக்கப்படுகின்றன.
5. தமிழக அரசு, பாடத்திட்டம்சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50சதவிகிதமும், NEET, JEE போன்றபோட்டித் தேர்வுகள் மற்றும்அரசு வேலைவாய்ப்புதேர்வுகள் சார்ந்தநிகழ்ச்சிகளுக்கு 10சதவிகிதமும் மனிதம்வளர்க்கும் நல்லொழுக்கம்,மனிதநேய நிலைத்தன்மை,மற்றும் சுற்றுச்சூழல்பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 40சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுநிகழ்ச்சி தயாரிப்புநடைபெறுகிறது.
6. இக்கல்வித் தொலைக்காட்சிநிலையம் சென்னை,கோட்டூர்புரம், அண்ணாநூற்றாண்டு நூலகத்தில் 8-வது தளத்தில்நிறுவப்பட்டுள்ளது.
7. கற்றலை இனிமையாக்கிஇடைநிற்றலைத் தவிர்க்கும்வகையிலும் கல்விநிகழ்ச்சிகள் அனைத்தும் அரசுமற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளி ஆசிரியர்குழுவால் தயாரிக்கப்பட்டுவருகிறது.
8. கல்வியும் கலையும் கல்வித்தொலைக்காட்சியின் சீரியகுறிக்கோள் கல்வியோடுஒழுக்கம், பெரியோர்களைமதித்தல், நேரம் தவறாமை,நாட்டுப்பற்று போன்றநற்பண்புகளைக்கதைகளாகவும்,குறும்படங்களாகவும்தயாரித்து ஒளிபரப்பதிட்டமிடப்பட்டுள்ளது.
9. தமிழ் செய்யுள் பகுதிகள்மற்றும் ஆங்கில மனப்பாடப்பகுதிகள் போன்றவைமனதைக் கவரும் இசைமற்றும் நடனப் பாடல்களாக,கற்றலை இனிமையாகவும்,எளிமையாகவும் மாற்றும்வகையில் உருவாக்கப்பட்டுவருகிறது.
10. தமிழகத்தின் அனைத்துபள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பொதுமக்கள் ஆகியஅனைவரின் நல் ஆதரவுடன்கல்வியின் வளர்ச்சிக்காகஉருவாக்கப்பட்டுள்ள தமிழகஅரசின் இக்கல்வித்தொலைக்காட்சி இந்தியாமட்டுமல்லாது, இந்தஉலகிற்கே மிகப் பெரியமுன்னோடித் திட்டமாகஉருவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment