FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 July 2019

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக் கூடாது" - பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் சுற்றறிக்கை

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார். 

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 அடுக்கு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த குழுக்கள் அரசு பள்ளிகளில் 20 உறுப்பினர்களை கொண்ட மேலாண்மைக்குழு அமைத்திட வேண்டும் என சுடலைக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

மேலாண்மை குழுவினர், புதிய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களின் வருகைப் பதிவை தக்கவைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, லாப நோக்கில் டியூசன் எடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment