FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 July 2019

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை

10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் நேற்றுஉண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டனர். அரசு ஊழியர்களின் கோரிக் கைகள் தொடர்பாக தமிழக முதல் வர் தங்களை பேச்சுவார்த்தைக்குஅழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது, ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக் கையை திரும்பப் பெறுவது மு.சுப்ரமணியன் உள்ளிட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீதான சஸ்பெண்ட் நடவடிக் கையை வாபஸ் பெறுவது உள் ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் நேற்று ஒருநாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஜாக்டோ ஜியோ அமைப் பின் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள், உயர்நிலைக்குழு உறுப் பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கோஷமிட்டனர். 

போராட்டத்துக்கு இடையில், மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாயவன் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரி யர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகளை அரசு உடனடியாக திரும் பப் பெற வேண்டும். கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் எவ்வாறு நாடாளுமன்றத் தேர் தலில் 38 இடங்களை அதிமுக இழந்ததோ அதைபோல் வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அனைத்து இடங்களையும் இழக்க நேரிடும். எங்களின் கோரிக்கை களை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்’’ என்றார்.மற்றொரு மாநில ஒருங்கிணைப் பாளரான மீனாட்சிசுந்தரம் கூறு கையில், ‘‘அரசு ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக கைவிட வேண் டும். கோரிக்கைளை நிறைவேற்று வது தொடர்பாக முதல்வர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும். 

அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு வகை செய்யும் அரசாணையையும் (எண் 56), அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணைகளையும் (எண் 100, 101) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந் தது.

No comments:

Post a Comment