சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமைகொண்டாடப்படுவதையொட்டி அது குறித்து மாணவர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் பல்வேறுபோட்டிகள் நடத்த மத்திய மனிதவள அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகாவை சிறப்பித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜக்கிய நாடுகள் சபைஉத்தரவின்படி சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படிவெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்விநிறுவனங்களில் யோகா சார்ந்து சிறப்பு விழிப்புணர்வுநிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடுமாறு மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாகநிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியம் உட்பட போட்டிகள் நடத்துமாறுபள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கைஅனுப்பப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .
No comments:
Post a Comment