சென்னை: தமிழகத்தின், புதிய தலைமைச் செயலாளராக, கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு டிஜிபியாகதிரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன்ஆகியோரின் பதவி காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, புதியதாக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம்46வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2010 ஆம்ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நிதித்துறைசெயலாளராக அவர் இருந்து வருகிறார். முன்னதாக, கூட்டுறவுதுறை முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும்புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பதவி வகித்த அனுபவம்உள்ளனவர். சேலம்தான் சண்முகத்தின் பூர்வீகம். வேளாண்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற இவர், 1985 பேட்ஜ் ஐஏஎஸ்அதிகாரியாகும். ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சி காலத்தில்கொண்டுவரப்பட்ட இலவச வண்ண தொலைக்காட்சி, அம்மாகேண்டீன் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கி, நிதி சுமையைசிறப்பாக கையாண்டவர் என்ற பாராட்டு பெற்றவர் இவர். திமுகமற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையில் ஒரேபதவியில் பொறுப்பு வகித்தவர் சண்முகம் ஐஏஎஸ் மட்டுமே. இதேபோல, சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகஇருக்கும், திரிபாதி, புதிய, சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பதவி உயர்வுபெற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர்டெல்லி எம்பில் படிப்பு முடித்தவர். 1985ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ்அதிகாரி இவர். தமிழகத்தில் இதுவரை 9 மாவட்டங்களில்எஸ்பியாக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். சென்னைகாவல்துறை கமிஷனராக பதவி வகித்துள்ளார். வங்கிகொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டபோது, இவர்சென்னை கமிஷனராக இருந்தார். ரவுடி வீரமணிஎன்கவுண்டரிலும் அவர் முக்கிய பங்கு வகித்ததாகசொல்லப்படுவதுண்டு. சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும்திரிபாதி பதவி வகித்திருந்தார். இப்போது காவல்துறையின்உச்சபட்ச பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment