FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 May 2019

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உருக்கமான வேண்டுகோள்

சென்னை: அரசு பள்ளிகளில் படித்து உன்னத நிலைக்குஉயர்ந்துள்ள முன்னாள் மாணவர்கள் தான் படித்த பள்ளியைஉயர்த்த முன்வர வேண்டும் என கல்வி அமைச்சர்செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தனியாருக்கு நிகரானவசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தனியார் பங்களிப்பு அளிக்கும் திட்டங்களையும், தனியார்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து வசதிகளைமேம்படுத்தும் திட்டங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்செங்கோட்டையன் விடுத்துள்ள வேண்டுகோளில், அரசுபள்ளிகளில் படித்து உன்னத நிலைக்கு உயர்ந்துள்ள முன்னாள்மாணவர்கள், தான் படித்த பள்ளியை உயர்த்த முன்வர வேண்டும்.

இதன்மூலம் அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு, வர்ணம் பூசுதல், இணையதளம், ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளிட்ட அடிப்படைவசதிகளை மேம்படுத்த உதவலாம். 2018-2019ம் ஆண்டில் 519 அரசுபள்ளிகளில் ரூ. 58 கோடி மதிப்பில் பணிகளைநிறையேற்றிதற்காக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும்நிறுவனங்களுக்கு உடனே அனுமதி தர உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

No comments:

Post a Comment