FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 May 2019

உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை ,சிறப்புநிலை அனுமதிப்பதில் காலதாமதம் கூடாது-10 நாட்களுக்குள் அனைத்து தேர்வுநிலைஅனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க கல்விசெயலர் உத்தரவு

27/05/19  மாலை நமது மாநில தலைவர் அய்யா செ.மு அவர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தொடக்க கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து பேசினார்.

 அப்போது இயக்குநர் அவர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் தலைமையில் காலை   தலைமை செயலகத்தில்  நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை கோரும் கருத்துருக்கள்  கல்வி சான்றிதழ் உண்மை தன்மை அறிந்தபின்தான் அனுமதி என  நிலுவையில் வைக்க வேண்டாம் என்றும் 10 நாட்களில் அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். மேலும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் 10ஆண்டு/20ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை/சிறப்புநிலை வழங்கி பணப்பயன்கள் 10 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்  வாட்ஸப்பில் வாய்ச் மெசேஞ் செய்தியாக அனுப்பியுள்ளார். எனவே விரைவில் ஆசிரியர்களுக்கு உரிய ஆணைகள் கிடைக்கும்.என தெரிவித்தார்

No comments:

Post a Comment