தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில்பதிவுசெய்துவிட்டுஅரசு வேலையை எதிர்பார்த்து 27 லட்சத்து 41 ஆயிரம் இளைஞர்கள்காத்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகமும், சென்னையில் கூடுதலாக மாவட்ட சிறப்புமாவட்டவேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும்மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல்முறை வேலைவாய்ப்புஅலுவலகங்களும் இயங்கி வருகின்றன.பட்டப் படிப்பு வரையிலானகல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்திலும் முதுகலை படிப்பு மற்றும் பிஇ,எம்பிபிஎஸ். எல்எல்பி, பிஎஸ்சிவிவசாயம் போன்ற தொழிற்கல்வி படிப்புதகுதிகளை இருப்பிடத்துக்கு ஏற்ப சென்னை அல்லது மதுரையில்உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவுசெய்யவேண்டும். இப்பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல்புதுப்பித்து வர வேண்டும். அப்போதுதான் பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். இல்லாவிட்டால் அதுகாலாவதியாகிவிடும்.இந்நிலையில், 31.3.2010 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்கள் பற்றியபுள்ளி விவரங்களை மாநிலவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
73 லட்சத்து 12 ஆயிரம் பேர்
அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் சேர்த்துபதிவுதாரர்களின்எண்ணிக்கை 73 லட்சத்து 12 ஆயிரத்து 390 ஆகஉள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளின்எண்ணிக்கை 17 லட்சத்து 41ஆயிரத்து 402 ஆகவும், 19 முதல் 23 வயதுவரையுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 93 ஆயிரத்து 351 ஆகவும், 24 முதல் 35 வயது வரையில் அரசுவேலை வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 41 ஆயிரத்து 521 ஆகவும், 36 வயது முதல் 57 வயது வரையுள்ளபதிவுதாரர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 29 ஆயிரத்து 429 ஆகவும்உள்ளன. மேலும் 57 வயதுக்கும் மேற்பட்ட 6,687 பேரும் அரசுவேலையை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
கல்வித்தகுதி வாரியாக..
கல்வித்தகுதி வாரியான பதிவுதாரர்கள் எண்ணிக்கை விவரம்:
எஸ்எஸ்எல்சி-க்கு குறைவானதகுதியுடையவர்கள் - 3,46,051 பேர்,
பிளஸ் 2 முடித்தவர்கள் - 33,54,282 பேர்,
பொறியியல்டிப்ளமோதாரர்கள் - 2,77,229 பேர்,
இடைநிலை ஆசிரியர்கள் - 2,07,239 பேர்,
பிஏபட்டதாரிகள் - 4,40,264 பேர்,
பிஎஸ்சி பட்டதாரிகள் - 5,84,272 பேர்,
பிகாம் பட்டதாரிகள் - 3,03,573 பேர்,
பிஎட் பட்டதாரி ஆசிரியர்கள் - 3,64,701 பேர்,
பொறியியல் பட்டதாரிகள் - 2,27,879 பேர்.
மேற்கண்ட விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைவெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment