FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 April 2019

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு 

8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்யவேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால்அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளே முழுபொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும்முறைஅமலில் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம்பாதிக்கப்படுவதாகக் கூறி, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுநடத்துவதற்கான சட்டத் திருத்தத்தை கடந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த முடிவுசெய்து தமிழக அரசுமுன்னேற்பாடுகளை தொடங்கியது.

இதற்கு ஆசிரியர் கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள்உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புதெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு தனது முடிவில் பின் வாங்கியது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகளில்படிக்கும் 6, 8-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அதன்நிர்வாகங்கள் நிறுத்தி வைப்பதாகப் புகார்கள் எழுந்தன.

 

சமீபத்தில் சென்னையில் தனியார் மழலையர் பள்ளியில் எல்கேஜிபடித்த மாணவியின் தேர்ச்சியை நிறுத்தி வைத்தது பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்விளைவுகளுக்குபொறுப்புஇதைத் தவிர்க்க தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களைக் கட்டாயத் தேர்ச்சி செய்யாவிட்டால், அதனால்ஏற்படும் பின்விளைவுகளுக்கு பள்ளிகளே பொறுப்பேற்க வேண்டும்என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் : பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வழியாகஅனைத்துவித பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்மற்றும்முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்பதாவது:

 

அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில்பயிலும்மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை இலவச கட்டாய கல்வி உரிமைசட்டத்தின் விதிகளைப் பின்பற்றி வெளியிட வேண்டும். அனைத்துபள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கான தேர்வுமுடிவுகளை மே 2-ம்தேதிக்குள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர்வெளியிட வேண்டும். அதேநேரம் நிர்ணயிக்கப்பட்டவிதிமுறைகளைத் தளர்த்தி தேர்ச்சி அளிக்க முதன்மைக் கல்விஅதிகாரியின் சிறப்புஅனுமதி பெறுவது அவசியம். மேலும், 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சிஅளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதனால் ஏற்படும்பின்விளைவுகளுக்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்அல்லது முதல்வர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

தலைமையாசிரியர்கள் குழு

இதற்கிடையே 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்நடத்தப்பட்டு, மாவட்ட அளவில் தலைமையாசிரியர்கள் குழுஅமைக்கப்பட்டு, குறிப்பிட்ட மதிப்பெண்கள் நிர்ணயம் செய்து தேர்வுமுடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment