FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 February 2019

குழந்தைகள் விரும்பும் இடமாக இருக்க வேண்டும் பள்ளிக்கூடம்!

டீச்சர்... எனக்கு ஹோம் ஒர்க் ஏன் தர்றீங்க? எனக்கு பிடிக்கல.. வைரலான குட்டிப் பையன் லெட்டர்


சேக்ரமெண்டோ: டீச்சர்... எனக்கு ஹோம் ஒர்க் ஏன் தர்றீங்க? எனக்குபிடிக்கல" ர குட்டிப்பையன் தன் ஆசிரியருக்கு எழுதிய லட்டர் ஒன்றுஇணையத்தில் வைரலாகி இருக்கிறது.


ஹோம்ஒர்க் என்றாலே வராத வயிற்று வலியை கூட வரவழைத்துஎஸ்கேப் விடுவார்கள் நம்ம வீட்டு வாண்டுகள். ஸ்கூல்ல படிக்கிறதேமுழி பிதுங்கும்போது, இதுல வீட்ல வேறு உட்கார்ந்து ஹோம் ஒர்க்பண்ணணுமான்னு நிறைய குழந்தைகள் நினைக்கறது சகஜம்தான்.


அப்படி ஹோம் ஒர்க் ஒரு சுட்டிப்பையன் மறுத்து இருக்கிறான். மறுத்ததுடன், இப்படியெல்லாம் ஹோம் ஒர்க் தரக்கூடாதுன்னும்சொல்லி அவனுடைய டீச்சருக்கு ஒரு லட்டரும் எழுதியிருக்கான்.

 

சிறுவன் கடிதம்


கலிபோர்னியாவில்தான் இந்த சம்பவம் நடந்திருகிறது. அந்தசிறுவன் பெயர் எட்வர்ட் இம்மானுவேல். ஏன் ஹோம் ஒர்க்எழுதவில்லை என்று டீச்சர் அவனை கேட்டிருக்காங்க போல. அதுக்குசிறுவன் எழுதிய லட்டர்தான் இது.


எனக்கு பிடிக்கல


அந்தகடிதத்தில், ''டீச்சர்.. வார இறுதி நாட்களில் ஹோம் ஒர்க் எழுதபிடிக்கல. இது நான் டிவி பார்க்கும் டைம், என் நண்பர்கள்கூடவிளையாடற டைம். இந்த நிஜமான உலகத்தில் ஹோம் ஒர்க்என்பதெல்லாம் ஒரு மாயை. அதனால் ஒரு பலனுமில்லை. அதனால்இனிமே ஹோம் ஒர்க் தர்றதை நிறுத்த வேண்டும்' என்று எழுதிஉள்ளான்.


ஃபைனல் டச்


இத்தோடு விட்டால் பரவாயில்லையே.. கடைசியாக ''இத்துடன் இந்தவழக்கு முடித்து வைக்கப்படுகிறது'' என்று ஏதோ கோர்ட் கேஸ்-க்குதீர்ப்பு வழங்குவது போல ஒரு ஃபைனல் டச் கொடுத்துமுடித்திருக்கிறான் அந்த சிறுவன்.

 

மழலைகடிதம்


இந்தகடிதத்தை அந்த டீச்சர் சிறுவனின் பெற்றோருக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அப்போதுதான் வீட்டுக்குகே விஷயம்தெரிந்திருக்கிறது. உண்மை மற்றும் துணிச்சலுடன் கூடியமழலையுடன் சிறுவன் எழுதியிருக்கும் இந்த கடிதம் இப்போதுஇணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment