தேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதல்அவகாசம் அளிக்கும் வகையில் தனது புதிய வழிகாட்டுதல்நெறிமுறைகளில் திருத்தம் செய்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக்குழு) வெளியிட்டுள்ளது.
பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுதமுடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கானவசதிகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை யுஜிசிஅண்மையில் வெளியிட்டது.
அதில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும்எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம்அல்லது சொந்த உதவியாளரை தாங்களே அழைத்து வரலாம்.
அவ்வாறு அழைத்து வரப்படும் சொந்த உதவியாளர் தேர்வு எழுதும்மாற்றுத் திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்கவேண்டும்.
தேர்வறைகளைப் பொருத்தவரை, மாற்றுத்திறனாளிகள் எளிதில்வந்து செல்லக் கூடிய வகையில் அமைக்க வேண்டும். முடிந்தவரைஇவர்களுக்கான தேர்வறை தரைத் தளத்தில் இருக்குமாறுஅமைக்கவேண்டும்.
மேலும், தேர்வறையில் பேசும் கால்குலேட்டர், பிரெய்லி ஸ்லேட், அபாகஸ், ஜியோமெட்ரி பாக்ஸ், பிரெய்லி அளவிடும் டேப்ஆகியவற்றை குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்பன உள்ளிட்டபுதிய நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன.
இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
ஆனால், தேர்வின்போது இந்த மாற்றுத்திறனாளிகளுக்குஅளிக்கப்பட்டு வந்த கூடுதல் கால அவகாசத்தை மாற்றி, ஒரு மணிநேரத்துக்கு 20 நிமிடங்கள் மட்டும் கூடுதலாக வழங்கும் வகையில்புதிய நடைமுறை இந்த புதிய வழிகாட்டுதலில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்தகூடுதல் கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்றும்தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்த தேர்வுக்கானகூடுதல் கால அவகாசத்தில் தற்போது திருத்தம் மேற்கொண்டுயுஜிசி செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 3 மணிநேரம் நடத்தப்படும் தேர்வில் உதவியாளரைபயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு மணி நேரம் கூடுதல் கால அவகாசம்அளிக்கலாம் என யுஜிசி அறிவித்துள்ளது. இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது .

No comments:
Post a Comment