FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 February 2019

வேண்டுகோள். அன்பான ஆசிரிய போராளிகளே!!

வேண்டுகோள். 
*அன்பான ஆசிரிய போராளிகளே!!* 
ஆரம்ப காலம் முதல் நமது அனைத்து சலுகைகளும் போராடிதான் பெற்று வருகிறோம். போராட்டங்களில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். போராட்டங்களும் போர்களங்களும் என்றும் மாறாது.நாம் இதுநாள் வரை கையில் எடுத்த கோரிக்கைகள் தோல்வி அடைந்தது இல்லை என்பதுதான் வரலாறு.தற்போது நமது கோரிக்கைகள் மிகவும் முக்கியத்துவமும் நியாயமும் மிக்கது.சற்று காலதாமதம் ஏற்படுமே தவிர இக்கோரிக்கைகள் நிச்சயம் வென்றெடுக்கப்படும். போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி சிறை சென்று தற்போது தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் , மற்றும் 17B நடவடிக்கை மூலம் பணியிட மாற்றம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மீண்டும் பாதிப்பின்றி பணியமர்த்த மாநில ஜாக்டோ ஜியோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எந்தவித கலக்கமும் வேண்டாம். விரைவில் பாதிப்பின்றி நீங்கள் பணிக்கு திரும்ப மாநில ஜாக்டோ ஜியோ நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மாநில ஜாக்டோ ஜியோ வின் அதிகாரப்பூர்வ தகவலை தவிர வேறு வகையான செய்திகளை பொதுத்தளத்தில் பரப்பி ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். மேலும் நீதிமன்றம் குறித்து அரசு மற்றும் அலுவலர் குறித்து விமர்சிக்க வேண்டாம். அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் ஜாக்டோ ஜியோ பேசுவது குறித்து மாற்றியோ, திரித்தோ, அதிகப்படியாகவோ, பொதுத்தளங்களில் பதிவிட வேண்டாம். இவ்வாறு நாம் விமர்சிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மையாக அமையாது. அருள்கூர்ந்து ஆவேசம் கொண்ட விமர்சனங்களை பொதுத்தளங்களில் வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள அன்போடு வேண்டுகிறேன். 
*செ. முத்துசாமி. Ex.MLC..* 
*மாநிலத் தலைவர்* 
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி* 

No comments:

Post a Comment