FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 February 2019

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடன் அதுகுறித்து வாட்ஸப்பில் பல கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முத்துசாமி ஆகிய நான் மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் .


அன்புத் தம்பிகள் பலர் பொதுக்குழுவை எங்கள் பகுதியில் நடத்துங்கள் என தனது விருப்பங்களை தெரிவித்தனர். சுற்றுலாத்தலமாகவும் நடத்த வேண்டும் என்றுசிலர் கேட்டுக் கொண்டனர்.


 சங்கத்தின் பால் மாறாத பற்றும் நன்மதிப்பும் கொண்டவர் மட்டுமல்லாது சங்க வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் பலர் இதுகாரும் ஓரிரு பொது குழுக்களில் மட்டும் கலந்து கொண்டவர்களும் கருத்து தெரிவித்தது மகிழ்ச்சியோடு வரவேற்கத்தக்கது

.

 இக் கருத்து கூறிய அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நாமக்கல் பொதுக்குழுவிற்கு தவறாது கலந்துகொண்டு தனது கருத்துக்களை எடுத்து உரைக்க வேண்டுகிறோம்.


 மேலும் எப்பொழுது எந்தெந்த காலகட்டத்தில் தாங்கள் குறிப்பிட்ட பகுதியில் நடத்தலாம் என்பதை தெரிவிக்க வேண்டுகிறோம் . 


அதன் அடிப்படையில் வரும் காலங்களில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு பொதுச் செயலாளர் அவர்கள் தலைவர் மற்றும் பொருளாளர் உடன் கலந்து பேசி எங்கு எப்போது கூட்டங்களை நடத்தலம் என  பட்டியலிட்டு அறிவிக்கலாம் .


எனவே கருத்து கூறிய அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன். இயக்கத்தின் பால் பேரன்பு கொண்டு தங்கள் பணியினையும்,சங்கப்பணியினையும் சிறப்புடன் செய்யும் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்பதில் அகமகிழ்வோம்.


 பெருமையுடன் 

உங்கள்


 செ முத்துசாமி,ExMLC 

மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment