தமிழகத்தில் புதுமைப்பள்ளி விருதுக்கு நடப்பாண்டில் 128 அரசுபள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், கற்றல் திறனைமேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறைகளை பின்பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல், பள்ளிமேலாண்மை குழுவுடன் ஒருங்கிணைந்து பள்ளி மற்றும்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்படும்பள்ளிகளை கண்டறிந்து ‘புதுமைப்பள்ளி’ என்ற விருது வழங்கதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி ஒரு மாவட்டத்திற்கு ஒருதொடக்க பள்ளி, ஒரு நடுநிலை பள்ளி, ஒரு உயர்நிலை மற்றும்மேல்நிலை பள்ளி என்று 4 பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும்.
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலா 1 லட்சமும், சான்றிதழ்களும் வழங்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளுக்கு தலா 2 லட்சமும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்ததிட்டத்தினால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இடையேஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு அரசு பள்ளிகளில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும், கற்றல் திறனை மேம்படுத்த உதவும், புதுமையான கற்றல் முறையை பின்பற்ற ஆசிரியர்களிடம் ஊக்கம்ஏற்படும் என்பதாகும். மேலும் பள்ளிகளில் அனைத்து கட்டமைப்புவசதிகளான சுற்றுச்சூழல் தூய்மை, கட்டிட வசதி, குடிநீர் மற்றும்கழிப்பறை வசதிகள் நிறைவு செய்யப்படும்.இந்த விருது வழங்கிடமாவட்டத்திற்கு 4 பள்ளிகளை தேர்வு செய்ய மாநில தேர்வு குழுவும், மாநில தேர்வுக்கு பரிந்துரை செய்திட மாவட்ட அளவில் தேர்வு குழுவும்அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்வு குழுவில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர்பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட 7 பேரும், பள்ளி கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர் உள்ளிட்ட5 பேர் மாநில அளவிலான குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.
வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றலுக்கு உதவும் வகையில்இருக்கை, மின்விசிறி வசதிகள், பள்ளியில் சுற்றுச்சுவர்அமைக்கப்பட்டிருத்தல், விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள், பசுமைச்சூழல், ஆசிரியர் ஓய்வறை போன்றஅம்சங்கள் ஆராயப்படும்.
மேலும் பள்ளி செயல்பாடுகளும் ஆராயப்பட்டு விருதுக்கான பள்ளிதேர்வு செய்யப்படும். பள்ளிக்கு விருதுக்கான பரிந்துரைகளை சமூகநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் போன்றோரும்வழங்கலாம்.
புதுமைப்பள்ளி விருதுக்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 1.92 கோடி பள்ளிகளுக்கு வழங்கப்படஉள்ளது என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

No comments:
Post a Comment