FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 January 2019

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் திரு முத்துசாமி EXMLC அவர்களின் போராட்ட அறைகூவல்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்று உள்ள ஆசிரிய போராளிகளே  வணக்கம் .
நாளைய தினம் ஜனவரி 26 தேசிய குடியரசு நாள் 
தேசிய தினத்தை பள்ளிகளில் தேசியக்கொடி  ஏற்றும் பணியில் தவறாது ஈடுபடுங்கள்.
அந்த தேசியக் கடமையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.
மேலும் அந்தந்த கிராம பகுதிகளில் நடைபெறும் கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளுங்கள். நமக்கு கிராம மக்களோடு தொடர்பு என்றும் எப்போதும் இருக்கவேண்டும். கிராமசபைக் கூட்டங்களில் போராட்டம் பற்றி பொதுமக்கள் கேட்டால் நமது நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கள். இரண்டாண்டு காலமாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நம்மை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் அம்மா அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசாங்கத்தின் போக்கை எடுத்து விளக்கமாக சொல்லுங்கள்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த வாழ்க்கை நிறைவேற்றாத இந்த மாநில அரசின் ஏமாற்று வேலையை எல்லோருக்கும் எடுத்து தெரிவியுங்கள் .
மேலும் அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை தொடங்கி அதில் அதற்கான  மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக ஜனவரி 2ம் தேதி கல்வித்துறை செயலாளர் நாம் சந்தித்தபோது கூறியதை கூறுங்கள்.
அப்படி இருக்க தற்பொழுதுஅப் பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமிப்பதை அதற்கான பயிற்சி பெறாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் முரண்பாட்டை எடுத்துச் சொல்லுங்கள் தினம் தினம்  கொள்கையை மாற்றிக் கொள்ளும் இந்த அரசாங்கத்தின், கல்வித் துறையின் அவலத்தை எடுத்துச் செல்லுங்கள்.

இந்த கல்வித்துறைக்கு தினமும் ஒரு கொள்கையா என்பதை கேள்வியாக மக்கள் முன் எழுப்புங்கள். அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுப்பி சட்டரீதியான தவறு செய்கிறார்கள் என்பதை எடுத்துச் செல்லுங்கள் .
இந்த அரசு கல்வித் துறை நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவதை எடுத்துச்சொல்லுங்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சற்றேறக்குறைய 500 க்கும் மேற்பட்டவை கல்வித்துறையில் உள்ளதை சுட்டிக் காட்டி நாட்டு மக்களுக்கு கல்வித்துறையின் தவறான  போக்கினைவிளக்கி கூறுங்கள் .
மேலும் இந்த அரசாங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரால் அம்மா அரசு எனக் கூறிக்கொண்டு ஜெயலலிதா அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றும் 

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அரசு என்றும்

கொள்கைகளை தினந்தோறும் மாற்றிக்கொள்ளும் அரசு என்றும்

தினம் தினம் ஒரு அறிக்கையும் ஒரு பிரச்சனையும் வெளியிட்டு மக்களை அதன்பால் திசைதிருப்பிக் கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் 

நம் நியாயத்தை திறம்பட உரைத்து உண்மையை புரிய வையுங்கள் 

ஆசிரிய பெருமக்களே துணிந்து நில்லுங்கள்
*தொடர்ந்து போராடுங்கள்*
*நீதி நம் பக்கம், நியாயம் நம் பக்கம் நீண்ட காலம் அநீதியை அரசு செய்ய இயலாது* *போராளிகளின் தியாகம் என்றும் வெற்றியில் முடியும் வெற்றிகளை நோக்கியே ஜாக்டோ ஜியோ

போராட்ட வாழ்த்துக்களுடன்  
அன்பன்
*செ.முத்துசாமி ExMLC
*மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment