FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

9 January 2019

அனைத்துக்  குடும்ப  அட்டைகாரர்களுக்கும்  பொங்கல்  பரிசு  வழங்கத்  தடை  விதித்து  உத்தரவிட்ட  நீதிமன்றம்,  வறுமைக்கோட்டுக்கு  கீழ்  உள்ளவர்களுக்கு  மட்டும்  பொங்கல்  பரிசு  வழங்க  வேண்டும்  என  உத்தரவு  பிறப்பித்தது.  

பொங்கல்  பரிசு  தொடர்பாகச்  சென்னை  உயர்  நீதிமன்றத்தில்  நடைபெற்ற  வழக்கில்  நீதிமன்றம்  அதிரடி  தடை  விதித்துள்ளது.  


அனைத்துக்  குடும்ப  அட்டைகாரர்களுக்கும்  பொங்கல்  பரிசு  வழங்கத்  தடை  விதித்து  உத்தரவிட்ட  நீதிமன்றம்,  வறுமைக்கோட்டுக்கு  கீழ்  உள்ளவர்களுக்கு  மட்டும்  பொங்கல்  பரிசு  வழங்க  வேண்டும்  என  உத்தரவு  பிறப்பித்தது.  
                                                                                                                 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க தடை விதித்துள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க தடை விதிக்கப்படுவதாகவும் பிற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடையில்லை எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment