FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

24 January 2019

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் வெல்லட்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முழு ஆதரவு

தமிழக அரசு தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது. முதலில் அரசாணை 56 ஐ வெளியிட்டு அரசுத்துறையில் ஆட்குறைப்பு வேலையையும், காலியாக உள்ள பணியிடங்களை இல்லாமல் ஆக்கும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. அரசாணை 100,101 ஆகியவை ஏற்கனவே இருந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பதவிகளில் மாறுதல்கள் என்ற பெயரில் நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தி தொடக்க கல்வித்துறையை இல்லாமல் அழித்தொழிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் புதிய ஓய்வூதியத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் 3500 அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்க அரசு முடிவெடுத்துள்ளது திறனற்ற அரசின் அலட்சியமே. ஒரே தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்களை அங்கன் வாடி மையங்களுக்கு மாற்றும் முடிவும், சமூகத்தில் முரண்பாட்டை உருவாக்கும். இது படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.  
3500 சத்துணவு மையங்களையும் அரசு மூட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் தமிழக இளைஞர் நலன் காப்பதற்கும், அரசுத்துறையை பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஜன-22 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய நியாயமான கோரிக்கையின் பின்னால் அனைத்து தரப்பட்ட மக்களும், இளைஞர்களும் ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தமிழக அரசும் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு காண வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு அரசை வலியுறுத்துகிறது. இத்தைகைய போராட்டத்திற்கு ஆதரவாக வாலிபர் சங்கத்தின் மாவட்ட குழுக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திட கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment