FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 January 2019

ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு?

புதுடில்லி: பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 2 வரை, 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.லோக்சபா தேர்தல், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதை மனதில் வைத்து, பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு, பொதுப்பிரிவில், வேலை, கல்வியில், 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை, மத்திய அரசு இயற்றியது.அடுத்த கட்டமாக, மக்களை கவரும் வகையில், கல்வி தொடர்பான மற்றொரு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது.இது குறித்து, கல்வித்துறை ஆர்வலர், அசோக் அகர்வாலுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இந்த திட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அமல்படுத்தப்படலாம். அவ்வாறு முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், அதுபற்றி தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தற்போது, குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம், 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, 1 - 8ம் வகுப்பு வரை கட்டாய கல்வி கற்க வகை செய்கிறது. சிறுபான்மை கல்வி மையங்கள் தவிர, அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி மையங்களில் இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழான இந்த திட்டத்தை, பிளஸ் 2 வரை விரிவுபடுத்தி, 25 சதவீத இட ஒதுக்கீடாக, மத்திய அரசு உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment