FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 January 2019

அகவிலைப்படி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? ஜனவரி 2019 முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வாய்ப்பு?

அகவிலைப் படி என்பது விலைவாசி உயர்வு புள்ளிகளின்

அடிப்படையில் சில கணக்கீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

 2018 டிசம்பர் மாதம் வரை விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தான்,  AICPIN யின்அடிப்படையில்கணக்கிடப்படும்.

இதன்படி அகவிலை உயர்வுக்கான சதவீதம் பற்றி, மத்திய அரசின்நிதித்துறை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பும்.

 

இதனைமத்திய அரசின் அமைச்சரவை (கேபினட்) ஆய்வு செய்து, அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை வழங்கும்.

இதன்பிறகு மத்திய அரசு முறைப்படி அகவிலைப்படி உயர்வு பற்றிஅறிவிக்கும். இது பெரும்பாலும் மார்ச் முதல் வாரம் தான்அறிவிக்கப்படும்.

இதன்பிறகு, மத்திய அரசு முறையாக அரசாணை பிறப்பிக்கும்.

இந்தஅரசாணையைப் பின்பற்றி தான் மாநில அரசுகள், தங்கள்ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மற்றும்இதற்கான அரசாணையை பிறப்பிக்க இயலும். இது பெரும்பாலும்மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரல் முதல் வாரம் தான் அறிவிக்கப்படும்.

ஆகவேமத்திய அரசு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணைபிறப்பிக்காமல், மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கஇயலாது.

 

தற்போதைய கணக்கீடுகளின் அடிப்படையில், 2019 ஜனவரி முதல் 3% அல்லது 4% அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது அகவிலைப்படி 9% லிருந்து 12% அல்லது 13% ஆக உயர்த்தக்கூடும்.

இதுவும் மார்ச் முதல் வாரத்தில் தான் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment