FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 January 2019

அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து 2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணை விவரம்

2009&TET  போராட்டக் குழுவிற்கு ஆசிரியர்களுக்கு இனிய மாலை வணக்கம் 

1)  நண்பர்களே இன்று காலை சுமார் 11: 20  நிமிடத்திற்கு அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ததை எதிர்த்து நமது சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு WP-1091/2019 விசாரணைக்கு எடுக்கப்பட்டது விசாரணையின்போது முதலில் 40 நிமிடங்கள் நமது சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் திரு எஸ் ஆர் சுப்பிரமணியன் சென்னை வழக்கறிஞர் மதுரை கிளையில் ஆஜர் ஆகி நமது கருத்துகளை முன்வைத்தனர்,தொடர்ந்து சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக நமது கருத்துக்களை நீதியரசர் உள்வாங்கிக் கொண்டு பல்வேறு வினாக்களை எழுப்பி தெளிவு பெற்றுக் கொண்ட பின்னர் அரசிடம் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார் 30 நிமிடங்களுக்கும் மேல் அரசால் கேட்கும் எந்த கேள்விகளுக்கும், பதிலளிக்க முடியாமல் மிகவும் திணறிவிட்டது 

இறுதியாக NCTE விதிமுறைகளை பின்பற்றாமல் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களில்  நியமனம் செய்வது மிக தவறானது அங்கு இரண்டாண்டுகள் பயிற்சி அளித்துவிட்டு தான் நியமனம் செய்யவேண்டும். இதற்கு உங்களது தரப்பில் என்ன பதில் ?? என்றும்  மேலும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச்  RTE சட்டத்தின்படி தற்போது நியமனங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது அதை தாண்டி நீங்கள் எப்படி இந்த நியமங்களை மாற்ற முடியும் என்றும் இறுதியாக நாளை கடந்த ஐந்தாண்டுகளில் மாண்டிசோரி பயிற்சி முடித்து இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்றவர்கள் பட்டியலை அரசு வழங்க வேண்டும் என்றும் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் இதுவரை நமக்கு வழக்கு மிக சாதாரணமாகவே வழக்கு சென்று கொண்டிருக்கிறது. 


2)  இன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் நமது வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது சார்ந்த இப்பொழுது நமது தரப்பில் பாடத் திட்டம் எதுவும்  உருவாக்கப்படவில்லை, விதிமுறைகளை பின்பற்றவில்லை கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்வது மிக தவறானது இந்த பயிற்சியை கொடுக்காமல் நியமனம் செய்வது அவசரகோலத்தில் எடுத்த முடிவாகும் என்று வாதிடப்பட்டது. 
(சென்னையில் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அங்கும் நமக்கு சாதகமாக இருக்கிறது.) 

வழக்கில் நடந்த சுவாரசியமான விவாதங்கள் முழு விவரங்களும் நாளை மாலை பதிவிடப்படும் 
செய்தி பகிர்வு 
ஜே.ராபர்ட் 
மாநில தலைமை 
 *2009&TET இடைநிலை போராட்டக் குழு

No comments:

Post a Comment