சென்னை : தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன்இன்று (ஜன.,2) துவங்குகிறது. லோக்சபா தேர்தல் வர உள்ளதால், கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்றஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பரில்நடக்கவில்லை. ஆனால், டிச., 6ல், சட்டசபையின் சிறப்பு கூட்டம்நடந்தது. இதில், கர்நாடக மாநிலம், மேகதாதுவில், அணைகட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை, அம்மாநில அரசுமேற்கொள்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அணைகட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வளகுழுமம் அனுமதி அளித்ததற்கும், கண்டனம் தெரிவித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அத்துடன், சட்டசபை கூட்டத் தொடர், முடித்துவைக்கப்பட்டது.
புத்தாண்டில், சட்டசபை கூட்டத் தொடர், இன்று துவங்குகிறது. இன்றுகாலை, 10:00 மணிக்கு, சட்டசபையில், கவர்னர், பன்வாரிலால்புரோஹித் உரையாற்றுகிறார். கவர்னர் உரையுடன், இன்றைய கூட்டம்நிறைவு பெறும். பின், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல்ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், கவர்னர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, எத்தனை நாட்கள் விவாதம்நடத்தலாம் என, முடிவு செய்யப்படும்.
லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், கவர்னர் உரையில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா... என்ற, எதிர்பார்ப்பு மக்களிடம்எழுந்துள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு, 'எய்ட்ஸ்' நோயாளி ரத்தம்செலுத்தப்பட்ட விவகாரம்; 'கஜா' புயல் பாதிப்பு, விளை நிலங்களில்மின்கோபுரம் அமைக்கும் பணி உட்பட, பல்வேறு பிரச்னைகளை, சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எனவே, சட்டசபையில், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment